மைனா, தலைவா போன்ற படங்களில் நடித்து தற்போது முன்னணி கதாநாயகியாக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் அமலா பால். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளில் நடித்து தற்போது வரை பிரபல ஹீரோயினாக தக்க வைத்து கொண்டிருக்கிறார். 2009 ஆம் ஆண்டு மலையாள நீலதாமரா என்ற படத்தில் நடித்த திரை உலகிற்கு முதல் முதலாக அறிமுகமானார்.
வீரசேகரன், சிந்து சமவெளி போன்ற படங்களில் நடித்த தனக்கென்று ஒரு அடையாளத்தை ரசிகர் மத்தியில் வைத்துக்கொண்டார். அதன் பின்னதாக 2010 ஆண்டு மைனா படம் மூலமாக திரையுலகில் மாபெரும் நடிப்பை வெளிக் கொண்டு வந்து சிறந்த நடிகைக்கான தேசிய விருதை வென்றார். அதன் பின்னதாக இவருக்கு மிகப்பெரிய மார்க்கெட் உண்டானதால், பல பட வாய்ப்புகள் வந்து குவிய ஆரம்பித்தது. வேட்டை, ராட்சசன், வேலையில்லா பட்டதாரி போன்ற மாபெரும் படங்களை நடித்து முன்னணி கதாநாயகியாக வலம் வந்து கொண்டிருந்தனர்.
அதன் பின்னதாக விஜயுடன் நடித்து வெளிவந்த தலைவா படம் மூலமாக இயக்குனர் ஏ.எல் விஜய் அவர்களை காதலித்து திருமணம் செய்து கொண்டார். மிக சிறப்பாக சென்று கொண்டிருந்த திருமண வாழ்க்கையில், சிறிது பிளவு ஏற்பட கருத்து வேறுபாடினால் இருவரும் பிரிந்து தற்போது விவாகரத்து வாங்கி உள்ளார்கள். அதன் பின் ஆடை, தி டீச்சர், கிறிஸ்டோபர் போன்ற ஹீரோயினை மையமாக வைத்த படங்களில் நடித்து சினிமாவில் மீண்டும் பிரதிபலிக்க ஆரம்பித்தார். தற்போது சில நாட்களுக்கு முன்பாக “ஜகத் தேசாய்” என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
தற்போது அமலாபால் ஏழு மாத கர்ப்பமாக இருக்கிறார். இவர் கர்ப்பிணி பெண்ணாக இருந்தாலும், இவர் ஆரம்ப காலகட்டத்தில் இருந்து இப்போது வரை எப்படி இருக்கிறாரோ அதேபோல் சுறுசுறுப்பாக இயங்கி வருகிறார். தற்போது கூட தன் டெலிவரி டேட் நெருங்கி வருவதை கூட கண்டுகொள்ளாமல், தன் தொழிலின் மேல் இருக்கும் ஆர்வத்தை காட்டும் படியாக, “கோட் லைஃப்” என்ற தன் பட புரமோஷனுக்காக இவர் முழுமையாக இவர் தன்னை ஈடுபடுத்தி வந்தார். இதற்காக பலரும் பலவிதமாக பாராட்டி தங்களின் வாழ்த்தை தெரிவித்து இருந்தார்கள். ஆனால் தற்போது இவர் குழந்தை பிறக்கும் சமயத்தில், 7 மாத நிறைவடைந்த கர்ப்பிணி பெண் என்று கூட பாராமல் இவர் செய்யும் லூட்டிகளை பலரும் விமர்சித்து வருகிறார்கள்.
அதாவது கர்ப்பமா இருக்கும் சமயத்தில் இவர் பப், கிளப் என்று பார்ட்டிகளை அட்டென்ட் செய்து கொண்டு, தன் வயிற்றில் இருக்கும் குழந்தை கூட கண்டுகொள்ளாமல் சகட்டை மேனிக்கு ஆடிக்கொண்டு பாடி கொண்டு திரிந்து கொண்டிருக்கிறார். இதற்காக பலரும் பலவிதமாக இப்படித்தான் கர்ப்பிணி பெண் நடந்து கொள்வதா என்று விமர்சித்து வருகிறார்கள்.
View this post on Instagram