டிப்ளமோ, டிகிரி முடித்தவர்களுக்கு அரிய வாய்ப்பு…. உளவுத்துறையில் 394 பணியிடங்கள்….. உடனே அப்ளை பண்ணுங்க…..!!!

By Srimathi on புரட்டாதி 10, 2025

Spread the love

மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் உளவுத்துறையில் காலியாக உள்ள 394 இளநிலை புலனாய்வு அலுவலகர் பணிக்கு ஆர்வமுள்ள இளைஞர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

தகுதி :

   

பொரியல் துறையில் எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக் மற்றும் கம்யூனிகேஷன், தகவல் தொழில்நுட்பம், கணினி பொறியியல், கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் போன்ற ஏதோ ஒரு படிப்பில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும் / இயற்பியல், கணிதம் பிசிஏ, பிஎஸ்சி கணினி அறிவியல் ஆகிய ஏதேனும் ஒரு பிரிவில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

   

காலிப்பணியிடங்கள் : 394 (SC – 60,UR – 157, EWS – 32, OBC – 117, ST – 28)

 

மாத சம்பளம் : ரூ.25,500 – 81,000

வயது வரம்பு : 27 க்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை : ஆன்லைன் எழுதி தேர்வு நேர்முகத் தேர்வு

விண்ணப்ப கட்டணம்: பொது, இடபிள்யுஎஸ், ஓபிசி பிரிவை சேர்ந்த ஆண்களுக்கு ரூ. 650, இதர பிரிவினர்கள் மற்றும் பெண்களுக்கு ரூ. 500

விண்ணப்பிக்கும் முறை : www.mha.gov.in அல்லது www.ncs.gov.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்

விண்ணப்பிக்கும் கடைசி: நாள் 14.09.2025