கள்ளக்காதலனுடன் உல்லாசம்.. கண்டித்த கணவனை கொலை செய்ய முயற்சி.. அடுத்த நடந்த பரபரப்பு சம்பவம்..!!

By Divyamayakannan on புரட்டாதி 10, 2025

Spread the love

கர்நாடக மாநிலம் விஜயாப்புரா மாவட்டத்தில் உள்ள இண்டி டவுனில் வசித்து வருபவர் தான் பீரப்பா மாயப்பா பூஜாரி. இவருடைய மனைவி சுனந்தா, இருவருக்கும் கடந்த 10 வருடங்களுக்கு முன்பு திருமணமாகி இரு பிள்ளைகள் உள்ளன. இந்த நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த சித்தப்பா என்பவருடன் சுனந்தாவுக்கு பழக்கம் ஏற்பட்டு நாலடிவில் கள்ளக்காதலாக மாறி உள்ளது. இருவரும் அடிக்கடி தனிமையில் உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். இதைக் குறித்து பீரப்பா மனைவியை கண்டித்துள்ளார். அதனால் கணவனை கொலை செய்ய முடிவெடுத்த சுனந்தா. கடந்த 1-ஆம் தேதி அன்று சாப்பிட்டுவிட்டு படுத்து உறங்கிய கணவரை கொலை செய்வதற்காக கள்ளக்காதலன் சித்தப்பாவை வீட்டிற்கு வரவழைத்துள்ளார்.

சித்தப்பா அவனுடைய நண்பருடன் சேர்ந்து வீட்டிற்கு வந்துள்ளான். மூவரும் சேர்ந்து பீரப்பாவின் கழுத்தை நெரித்து மற்றும் மர்ம உறுப்பை மிதித்துக் கொள்ள முயற்சித்துள்ளனர்.  பீரப்பா , சுனந்தாவை எட்டி உதைத்து கூச்சலிட்டு உள்ளார். சத்தம் கேட்டு வீட்டின் உரிமையாளர் ஓடி வந்துள்ளார். நீண்ட நேரம் கதவை தட்டிய பிறகு தூங்கிக் கொண்டிருந்த பீரப்பாவின் எட்டு வயது மகன் கதவை திறந்துள்ளான். வீட்டின் உரிமையாளரை கண்டவுடன் சித்தப்பா மற்றும் நண்பர் தப்பித்து ஓடி விட்டனர். தற்போது பீரப்பா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். சம்பவத்தை குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்த சுனந்தாவை கைது செய்து நீதிமன்ற காவலில் அடைத்துள்ளனர்.

   

இந்த நிலையில் கள்ளக்காதலன் சித்தப்பா சமூக வலைத்தளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். வீடியோவில் எனக்கும் இந்த கொலை முயற்சிக்கும் எந்த ஒரு சம்பந்தமும் கிடையாது முழுக்க முழுக்க சுனந்தா திட்டமிட்டபடி தான் அரங்கேறியது. இந்த வழக்கில் சுமந்தாவின் அண்ணன் மற்றும் கிராம பஞ்சாயத்து உறுப்பினர் ஒருவருக்கும் தொடர்பு இருப்பதாக அவர்களையும் போலீசார் கைது செய்து வைத்துள்ளனர். அந்த வீடியோவில் இவர்களுக்கும் தொடர்பு உள்ளதாக  கள்ளக்காதலன் கூறியுள்ளார். கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனைக் கொலை செய்ய முயற்சித்த இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.