நாட்டையே உலுக்கும் கொடூரம்… வீடியோ காலில் 70 மணி நேரம் சித்திரவதையை அனுபவித்த பெண் டாக்டர்… இறுதியில் காத்திருந்த பேரதிர்ச்சி…!

Spread the love

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தை சேர்ந்த 76 வயதான பெண் மருத்துவர் அந்த பகுதியில் உள்ள பிரபல மருத்துவமனையில் உறைவிட மருத்துவராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். கடந்த ஐந்தாம் தேதி அவருடைய செல்போனுக்கு தெரியாத ஒரு நம்பரில் இருந்து whatsapp வீடியோ அழைப்பு வந்துள்ளது. அதனை அவர் எடுத்துப் பேசிய நிலையில் எதிர் முனையில் தோன்றிய அந்த நபர் பெங்களூரு நகர போலீசார் உடையில் இருந்தார். அவன் சுப்ரீம் கோர்ட், அமலாக்கத்துறை மற்றும் ரிசர்வ் வங்கியின் முத்திரை இட்ட ஆவணங்களை காட்டி நீங்கள் ஒருவரை கடத்தியதாக புகார் வந்துள்ளது.

அதனால் உங்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு தற்போது டிஜிட்டல் முறையில் உங்களை கைது செய்துள்ளோம் என்று தெரிவித்துள்ளார். இதனைக் கேட்டு அந்தப் பெண் அதிர்ச்சி அடைந்த நிலையில் நாங்கள் கேட்கும் பணத்தை கொடுத்தால் இந்த சிக்கலில் இருந்து நீங்கள் வெளிவரலாம் என்று அந்த நபர் கூறியுள்ளார். மறுநாள் மீண்டும் அழைப்பு வந்த நிலையில் அவர் தன்னுடைய ஓய்வூதிய கணக்கிலிருந்து ஆறு லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் பணத்தை அவர்கள் குறிப்பிட்ட வங்கி கணக்குக்கு மாற்றி உள்ளார்.

அந்த வங்கிக் கணக்கு மராட்டிய மாநிலத்தில் இருப்பதாக காட்டியுள்ளது. அத்தோடு பிரச்சனை முடிந்து விட்டது என்று நினைத்து அவருக்கு மீண்டும் whatsapp வீடியோ கால் வந்துள்ளது. அப்போதும் மிரட்டப்பட்ட நிலையில் சுமார் 70 மணி நேர சித்திரவதையால் பெண் டாக்டருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. உடனடியாக அவர் அருகில் இருந்த மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

அவர் உயிரிழந்த பிறகும் செல்போனுக்கு வீடியோ அழைப்புகளும் குறுஞ்செய்திகளும் வந்து கொண்டே இருந்தது. இது பற்றி அவருடைய குடும்பத்தினர் கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் பெண் டாக்டரை மிரட்டிய சைபர் கிரைம் குற்றவாளிகளை வலை வீசி தேடி வரும் நிலையில் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Nanthini

Recent Posts

FLASH: விஜய்யுடன் சேர்த்து மொத்தம் 9 அமைச்சர்கள் பதவியேற்பு.. யார் யார்..? எதிர்பார்ப்பில் தமிழகம்…!!

தமிழக அரசியலில் ஒரு புதிய சகாப்தம் தொடங்கியுள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் மற்றும் அவரது கூட்டணி…

9 மணத்தியாலங்கள் ago

“மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு” சிக்கல்களை உருவாக்கினால் என்ன நடக்கும் தெரியுமா..? எச்சரித்த நடிகர் ராகவா லாரன்ஸ்..!!

தேர்தல் முடிவுகள் குறித்து நடிகர் ராகவா லாரன்ஸ் தனது எக்ஸ் (X) தளத்தில் கருத்து தெரிவித்துள்ளார். மக்கள் தீர்ப்பின் மூலம்…

9 மணத்தியாலங்கள் ago

BIG BREAKING: விஜய் CM ஆக பதவியேற்கிறார்… அதிகாரபூர்வ அறிவிப்பு..!!

தமிழக அரசியலில் ஒரு புதிய அத்தியாயம் தொடங்கும் விதமாக, பெரும்பான்மையை நிரூபித்த விஜய் அவர்களை ஆட்சியமைக்க ஆளுநர் அழைத்துள்ளார். இதனைத்…

9 மணத்தியாலங்கள் ago

“உங்க விஜய் நா வரேன்” நாளை மதியம் 3:15 மணிக்கு பதவியேற்கிறார் விஜய்… கொண்டாடும் தமிழகம்..!!

தமிழக அரசியலில் ஒரு முக்கிய திருப்புமுனையாக, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் அவர்கள் நாளை மதியம் 3:15 மணிக்குத்…

9 மணத்தியாலங்கள் ago

“சி. ஜோசப் விஜய் எனும் நான்…” அந்த வார்த்தைக்காக காத்திருக்கிறேன்… விஜய்மா நீ வருவ… ஸ்ரீமன் வெளியிட்ட உருக்கமான வீடியோ..!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவராக அரசியல் பயணத்தைத் தொடங்கியுள்ள நிலையில், அவருக்கு ஆதரவாக நடிகர் ஸ்ரீமன் உருக்கமான…

9 மணத்தியாலங்கள் ago

“விஜய் RSS-ன் பிள்ளை” என்பதில் மாற்றமில்லை.. அதிரடி காட்டும் திருமாவளவன்! ஆதரவு அளிப்பது ஏன்? – அதிரவைக்கும் பின்னணி..!!

தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த விவகாரத்தில், தவெக ஆட்சிக்குத் தனது ஆதரவை வெளியிலிருந்து அளிப்பதாகத் திருமாவளவன் அறிவித்துள்ளார்.…

9 மணத்தியாலங்கள் ago