வெளிநாட்டில் வேலை பார்த்த கணவர்… பணத்தை வட்டிக்கு விட்ட மனைவி.. 2 குழந்தைகளோடு பிணமாக மீட்கப்பட்ட பயங்கரம்…!

Spread the love

திருச்சி மாவட்டம் நாயுடு பேட்டை மற்றும் பூதலப்பட்டு தேசிய நெடுஞ்சாலையில் காடங்கி சுங்கச்சாவடியிலிருந்து சுமார் 2 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள வனப்பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேர் பிணமாக மீட்கப்பட்டன. அவர்களின் உடலுக்கு அருகே மருந்து சீட்டு மற்றும் பொருட்கள் அனைத்தும் சிதறி கிடந்தது. நான்கு பேரின் உடல்களை போலீசார் மீட்டை விசாரணை நடத்தியதில் அவர்கள் தமிழகத்தில் நாகப்பட்டினம் மாவட்டம் திட்டச்சேரியை சேர்ந்த வெங்கடேஷ் என்பவரின்  மனைவி ஜெயமாலா, மகள்கள் தர்ஷினி (9), ஹர்ஷினி (3) என்பதும், தூக்கில் தொங்கியவர் ஜெயமாலாவின் பெரியம்மா மகன் கலைச்செல்வம் என்பதும் தெரிய வந்தது.

ஜெயமாலாவின் கணவர் வெங்கடேஷ் குவைத்தில் வேலை பார்த்து வந்த நிலையில் தனது இரண்டு குழந்தைகளுடன் ஜெயமாலா கிராமத்தில் வசித்து வந்தார். வெளிநாட்டில் இருந்த கணவர் மனைவிக்கு அடிக்கடி பணம் அனுப்பி வைப்பார். அந்த பணத்தை கலைச்செல்வம் மூலம் வட்டிக்கு விட்டு வந்தார். வட்டி தொழிலில் அவர்களுக்கு நஷ்டம் ஏற்பட்டது. இந்நிலையில் வெங்கடேஷ் கடந்த 2024 ஆம் ஆண்டு குவைத்தில் இருந்து சொந்த ஊருக்கு திரும்பிய போது தன் மனைவி ஜெயமாலாவிடம் தான் அனுப்பிய பணத்தை என்ன செய்தாய் என்று கேட்டுள்ளார்.

அதற்கு மனைவியிடம் இருந்து எந்த பதிலும் கிடைக்காததால் வாக்குவாதம் ஏற்பட்டு பிறகு வெங்கடேஷ் மீண்டும் குவைத் சென்றுவிட்டார். இந்நிலையில் கடந்த ஜூலை மாதம் வெங்கடேஷ் தன்னுடைய மனைவி மற்றும் இரண்டு மகள்களை காணவில்லை என்ற தகவலை கேள்விப்பட்டு சொந்த ஊருக்கு மீண்டும் வந்து விசாரித்துள்ளார். ஆனால் எந்த ஒரு தகவலும் கிடைக்காததால் போலீசில் புகார் அளித்தார். வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில் திருப்பதி மாவட்டம் வனப்பகுதியில் ஜெயமாலா மற்றும் இரண்டு மகள்களுடன் கலைச்செல்வன்.

அதில் கலைச்செல்வன் மற்றும் ஜெயமாலா ஆகியோரின் முகத்தில் துணியை போர்த்தி செல்லோ டேப் ஒட்டப்பட்டு இருந்தது. எனவே வட்டி தொழிலில் பிரச்சனை ஏற்பட்டதால் எழுந்த முன்விரோதம் காரணமாக நான்கு பேரும் கடத்தி கொலை செய்யப்பட்டு உடல்களை ஆந்திர வனப்பகுதியில் வீசி இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். அவர்களை கொலை செய்தவர்கள் யார் என்று ஆந்திர போலீசார் தமிழக போலீசார் உடன் இணைந்து விசாரணையை தீவிரப்படுத்தி வரும் நிலையில் இந்த சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Nanthini

Recent Posts

FLASH: விஜய்யுடன் சேர்த்து மொத்தம் 9 அமைச்சர்கள் பதவியேற்பு.. யார் யார்..? எதிர்பார்ப்பில் தமிழகம்…!!

தமிழக அரசியலில் ஒரு புதிய சகாப்தம் தொடங்கியுள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் மற்றும் அவரது கூட்டணி…

8 மணத்தியாலங்கள் ago

“மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு” சிக்கல்களை உருவாக்கினால் என்ன நடக்கும் தெரியுமா..? எச்சரித்த நடிகர் ராகவா லாரன்ஸ்..!!

தேர்தல் முடிவுகள் குறித்து நடிகர் ராகவா லாரன்ஸ் தனது எக்ஸ் (X) தளத்தில் கருத்து தெரிவித்துள்ளார். மக்கள் தீர்ப்பின் மூலம்…

8 மணத்தியாலங்கள் ago

BIG BREAKING: விஜய் CM ஆக பதவியேற்கிறார்… அதிகாரபூர்வ அறிவிப்பு..!!

தமிழக அரசியலில் ஒரு புதிய அத்தியாயம் தொடங்கும் விதமாக, பெரும்பான்மையை நிரூபித்த விஜய் அவர்களை ஆட்சியமைக்க ஆளுநர் அழைத்துள்ளார். இதனைத்…

8 மணத்தியாலங்கள் ago

“உங்க விஜய் நா வரேன்” நாளை மதியம் 3:15 மணிக்கு பதவியேற்கிறார் விஜய்… கொண்டாடும் தமிழகம்..!!

தமிழக அரசியலில் ஒரு முக்கிய திருப்புமுனையாக, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் அவர்கள் நாளை மதியம் 3:15 மணிக்குத்…

8 மணத்தியாலங்கள் ago

“சி. ஜோசப் விஜய் எனும் நான்…” அந்த வார்த்தைக்காக காத்திருக்கிறேன்… விஜய்மா நீ வருவ… ஸ்ரீமன் வெளியிட்ட உருக்கமான வீடியோ..!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவராக அரசியல் பயணத்தைத் தொடங்கியுள்ள நிலையில், அவருக்கு ஆதரவாக நடிகர் ஸ்ரீமன் உருக்கமான…

8 மணத்தியாலங்கள் ago

“விஜய் RSS-ன் பிள்ளை” என்பதில் மாற்றமில்லை.. அதிரடி காட்டும் திருமாவளவன்! ஆதரவு அளிப்பது ஏன்? – அதிரவைக்கும் பின்னணி..!!

தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த விவகாரத்தில், தவெக ஆட்சிக்குத் தனது ஆதரவை வெளியிலிருந்து அளிப்பதாகத் திருமாவளவன் அறிவித்துள்ளார்.…

8 மணத்தியாலங்கள் ago