திருச்சி மாவட்டம் நாயுடு பேட்டை மற்றும் பூதலப்பட்டு தேசிய நெடுஞ்சாலையில் காடங்கி சுங்கச்சாவடியிலிருந்து சுமார் 2 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள வனப்பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேர் பிணமாக மீட்கப்பட்டன. அவர்களின் உடலுக்கு அருகே மருந்து சீட்டு மற்றும் பொருட்கள் அனைத்தும் சிதறி கிடந்தது. நான்கு பேரின் உடல்களை போலீசார் மீட்டை விசாரணை நடத்தியதில் அவர்கள் தமிழகத்தில் நாகப்பட்டினம் மாவட்டம் திட்டச்சேரியை சேர்ந்த வெங்கடேஷ் என்பவரின் மனைவி ஜெயமாலா, மகள்கள் தர்ஷினி (9), ஹர்ஷினி (3) என்பதும், தூக்கில் தொங்கியவர் ஜெயமாலாவின் பெரியம்மா மகன் கலைச்செல்வம் என்பதும் தெரிய வந்தது.
ஜெயமாலாவின் கணவர் வெங்கடேஷ் குவைத்தில் வேலை பார்த்து வந்த நிலையில் தனது இரண்டு குழந்தைகளுடன் ஜெயமாலா கிராமத்தில் வசித்து வந்தார். வெளிநாட்டில் இருந்த கணவர் மனைவிக்கு அடிக்கடி பணம் அனுப்பி வைப்பார். அந்த பணத்தை கலைச்செல்வம் மூலம் வட்டிக்கு விட்டு வந்தார். வட்டி தொழிலில் அவர்களுக்கு நஷ்டம் ஏற்பட்டது. இந்நிலையில் வெங்கடேஷ் கடந்த 2024 ஆம் ஆண்டு குவைத்தில் இருந்து சொந்த ஊருக்கு திரும்பிய போது தன் மனைவி ஜெயமாலாவிடம் தான் அனுப்பிய பணத்தை என்ன செய்தாய் என்று கேட்டுள்ளார்.
அதற்கு மனைவியிடம் இருந்து எந்த பதிலும் கிடைக்காததால் வாக்குவாதம் ஏற்பட்டு பிறகு வெங்கடேஷ் மீண்டும் குவைத் சென்றுவிட்டார். இந்நிலையில் கடந்த ஜூலை மாதம் வெங்கடேஷ் தன்னுடைய மனைவி மற்றும் இரண்டு மகள்களை காணவில்லை என்ற தகவலை கேள்விப்பட்டு சொந்த ஊருக்கு மீண்டும் வந்து விசாரித்துள்ளார். ஆனால் எந்த ஒரு தகவலும் கிடைக்காததால் போலீசில் புகார் அளித்தார். வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில் திருப்பதி மாவட்டம் வனப்பகுதியில் ஜெயமாலா மற்றும் இரண்டு மகள்களுடன் கலைச்செல்வன்.
அதில் கலைச்செல்வன் மற்றும் ஜெயமாலா ஆகியோரின் முகத்தில் துணியை போர்த்தி செல்லோ டேப் ஒட்டப்பட்டு இருந்தது. எனவே வட்டி தொழிலில் பிரச்சனை ஏற்பட்டதால் எழுந்த முன்விரோதம் காரணமாக நான்கு பேரும் கடத்தி கொலை செய்யப்பட்டு உடல்களை ஆந்திர வனப்பகுதியில் வீசி இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். அவர்களை கொலை செய்தவர்கள் யார் என்று ஆந்திர போலீசார் தமிழக போலீசார் உடன் இணைந்து விசாரணையை தீவிரப்படுத்தி வரும் நிலையில் இந்த சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
