திமுக கூட்டணியில் இருந்து விலகல்… தனித்துப் போட்டியிடும் காங்கிரஸ்… சீமான் பரபரப்பு பேட்டி…!

Spread the love

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்கள் மட்டுமே உள்ளதால் தமிழக அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கிவிட்டது. எந்த கட்சி யாருடன் கூட்டணி அமைக்க போகிறது என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. அரசியல் கட்சிகளும் எந்த கட்சியுடன் கூட்டணி அமைக்கலாம் எத்தனை தொகுதிகளை கேட்கலாம் என்ற ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றன. திமுகவை பொருத்தவரையில் தனது கூட்டணியை பலமாக வைத்திருந்தாலும் கூட்டணியில் இருக்கக்கூடிய கட்சிகள் கூடுதல் தொகுதிகளை கேட்டு ஸ்டாலினுக்கு நெருக்கடி கொடுத்து வருகின்றன.

குறிப்பாக திமுகவிடம் அதிக தொகுதிகளை கேட்டு வாங்க வேண்டும் என்ற முடிவில் காங்கிரஸ் உள்ளது. திமுகவிடம் பேச்சுவார்த்தை நடத்துவதற்காகவே காங்கிரஸ் தரப்பில் ஐந்து பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து ஆட்சியில் பங்கு மற்றும் கூடுதல் தொகுதி என காங்கிரஸ் குரல் எழுப்பி வருகிறது. இந்நிலையில் திமுக மற்றும் காங்கிரஸ் கூட்டணி தொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பில் சீமான் பேசியுள்ளார்.

அதில், விஜய் கூட்டணியை விரும்புகின்றார். இதனால் தங்களுடன் வரும் கட்சிகளை சேர்த்துக் கொள்கிறார். நான் கூட்டணியை விரும்பவில்லை. அதனால் கூட்டணிக்கு போகவில்லை. திமுகவுடன் கூட்டணியில் இருப்பது கஷ்டமாக இருந்தால் காங்கிரஸ் தனியாக தேர்தலில் நிற்க வேண்டியதுதானே. அவர்கள் கூடுதல் தொகுதி கேட்பதற்காக பேரம் பேசுவார்களே தவிர திமுக கூட்டணியில் இருந்து ஒருபோதும் வெளியேற மாட்டார்கள் என்று தெரிவித்துள்ளார். தமிழக வெற்றி கழகம் கட்சியுடன் ரகசியமாக கூட்டணிக்கு காங்கிரஸ் பேச்சுவார்த்தை நடத்துவதாக ஒரு தகவல் நீண்ட காலமாக பரவி வரும் நிலையில் தொகுதி பேரம் செய்யவே காங்கிரஸ் இதுபோன்ற செய்தியை பரப்பி விடுவதாக சீமான் குற்றம் சாட்டியுள்ளார்.

Nanthini

Recent Posts

அரசு ஊழியர்களுக்கு குட் நியூஸ்…! ரூ.838 கோடியில் புதிய காப்பீட்டு திட்டம்… பட்ஜெட்டில் வெளியான அதிரடி அறிவிப்பு…!!

தமிழக அரசு ஊழியர்களின் மருத்துவ நலனைப் பாதுகாக்கும் பொருட்டு புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்திற்காக ரூ.838 கோடி நிதி ஒதுக்கீடு…

10 minutes ago

BREAKING: மகளிருக்கு இலவசமாக 5 ஆடுகள்… வெளியான சூப்பர் குட் நியூஸ்…!!

பெண்களின் பொருளாதாரச் சுதந்திரத்தை உயர்த்தும் நோக்கில் 'வெற்றி மகளிர் ஆடு வளர்ப்பு திட்டம்' என்னும் புதிய திட்டத்தை அரசு பட்ஜெட்டில்…

4 மணத்தியாலங்கள் ago

மூத்த குடிமக்களுக்கு ஜாக்பாட்…! ரூ.33 கோடியில் வெளியான மாஸ் திட்டம்… நடமாடும் மருத்துவ மையங்கள் குறித்த நிதியமைச்சரின் அறிவிப்பு…!!

மாநிலத்தில் உள்ள மூத்த குடிமக்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் வகையில், 1,000 நடமாடும் முதியோர் சிகிச்சை மையங்கள் தொடங்கப்படும் என நிதியமைச்சர்…

4 மணத்தியாலங்கள் ago

BREAKING: “கலைஞர் கனவு இல்லம் இனி வெற்றி வீடு…” பட்ஜெட்டில் வெளியான அதிரடி பெயர் மாற்றம்…!!!

தமிழகத்தில் ஏழை எளிய மக்களுக்குப் பாதுகாப்பான உறைவிடத்தை வழங்கும் நோக்கில் முன்னெடுக்கப்பட்டு வந்த 'கலைஞர் கனவு இல்லம்' திட்டமானது தற்போது…

4 மணத்தியாலங்கள் ago

BREAKING: உதவித்தொகை ரூ.6,000-ல் இருந்து ரூ.7,000-ஆக அதிகரிப்பு… சற்று முன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!!

தமிழக வரவு செலவுத் திட்டத்தில் கடலோரச் சமூகத்தின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கும் வகையில், மீன்பிடித் தடைக்கால உதவித்தொகை ரூ.6,000-ல் இருந்து ரூ.7,000…

4 மணத்தியாலங்கள் ago

BREAKING: மின் கட்டமைப்புக்கு ரூ.2,000 கோடி ஒதுக்கீடு…! 40,000 பழைய மின்மாற்றிகளை மாற்ற அதிரடி திட்டம்…!!

தமிழகத்தில் மின் விநியோகச் சீரமைப்பு மற்றும் தடையற்ற மின்சாரத்தை உறுதிசெய்யும் நோக்கில், ரூ.2,000 கோடி செலவில் 40,000 பழமையான மின்மாற்றிகள்…

4 மணத்தியாலங்கள் ago