திமுக கூட்டணியில் அதிரடி திருப்பம்…!! கூட்டாக போர்க்கொடி தூக்கிய 6 கட்சிகள்… சிக்கலில் முதல்வர் ஸ்டாலின்…!!

By Devi Ramu on பங்குனி 8, 2026

Spread the love

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் வேளையில், திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு தொடர்பாகப் பெரும் இழுபறி நீடிக்கிறது. காங்கிரஸ் கட்சிக்கு ஏற்கனவே 28 இடங்கள் ஒதுக்கப்பட்ட நிலையில், விசிக, தேமுதிக, கம்யூனிஸ்ட் கட்சிகள், மக்கள் நீதி மய்யம் மற்றும் மதிமுக ஆகிய ஆறு கட்சிகள் தங்களுக்குக் கூடுதல் தொகுதிகள் கேட்டுப் போர்க்கொடி தூக்கியுள்ளன. திமுகவின் பேச்சுவார்த்தை குழு மிகக் குறைவான எண்ணிக்கையிலான இடங்களையே முன்மொழிவதால், இந்தக் கட்சிகள் அதிருப்தி அடைந்துள்ளன.

குறிப்பாக, தங்களுக்கு இரட்டை இலக்கத் தொகுதிகள் வேண்டும் என்பதில் கூட்டணிக் கட்சிகள் உறுதியாக உள்ளன. மேலும், சில கட்சிகளை உதயசூரியன் சின்னத்திலேயே போட்டியிட திமுக வற்புறுத்துவதும், புதிய வரவான தேமுதிகவுக்கு அதிக இடங்கள் ஒதுக்கப்படுவதும் பழைய கூட்டணிக் கட்சிகளிடையே மனக்கசப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சிக்கலைத் தீர்க்க முதல்வர் ஸ்டாலின் நேரடியாகத் தலையிட வேண்டும் என்று கூட்டணிக் கட்சிகள் வலியுறுத்துகின்றன. நாளை திருச்சியில் நடைபெறும் திமுக மாநாட்டிற்குப் பிறகு இந்த விவகாரத்தில் ஒரு தெளிவான முடிவு எட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.