தமிழக வெற்றிக் கழகத்தின் மகளிர் தின விழாவில் பேசிய அக்கட்சியின் தலைவர் விஜய், தனது குடும்ப விவகாரம் குறித்து “சில விஷயங்கள் விவாதிக்கத் தகுதியற்றவை, அதெல்லாம் ஒரு ‘வொர்த்தே’ இல்லை என்று குறிப்பிட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 25 ஆண்டுகளாக அவருடன் இருந்த மனைவி சங்கீதாவை, பொது மேடையில் இவ்வளவு அற்பமாகச் சித்தரித்தது அவர் தரப்பினரை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதனால் மிகுந்த மனவேதனை அடைந்துள்ள சங்கீதா, இதுவரை காத்து வந்த மௌனத்தைக் கலைக்க முடிவெடுத்துள்ளதாகத் தகவல்கள் கசிகின்றன.
தனது அர்ப்பணிப்பை அவமதித்த விஜய்க்குப் பதிலடி கொடுக்கும் வகையில், விரைவில் ஒரு அதிரடி செய்தியாளர் சந்திப்பை நடத்த சங்கீதா திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. அதில் குடும்பச் சிக்கல்கள் மட்டுமன்றி, விஜய்யின் அரசியல் பிம்பத்திற்குப் பின்னால் மறைந்துள்ள உண்மைகளையும், அவரது வாழ்க்கையில் மூன்றாம் நபர்களின் தலையீடு குறித்தும் அவர் அம்பலப்படுத்தக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த உள்வீட்டுப் போராட்டம் விஜய்யின் அரசியல் பயணத்தில் ஒரு மிகப்பெரிய சவாலாக உருவெடுத்துள்ளது.
