‘சிங்கிள் ஷாட்’டுக்கும், ‘சிங்கிள் டேக்’கும் உள்ள வித்தியாசம் என்ன தெரியுமா?.. இதோ தெரிஞ்சுக்கோங்க..!

By Mahalakshmi

Published on:

தென்னிந்தியா சினிமா என்பது கோலிவுட், டோலிவுட், மோலிவுட், சாண்டல்வுட் என குறிப்பிடுப்பார்கள். முன்பெல்லாம் இந்திய சினிமா என்று கூறினால் பாலிவுட் தான் என்பார்கள். ஆனால் தற்போது தென்னிந்திய சினிமாவும் பல முன்னேற்றங்களை கொண்டிருக்கின்றது. சென்னையில் ஊமைப்படத்திற்கான தயாரிப்பு நிறுவனம் முதன் முதலாக 1900 ஆம் ஆண்டுகளில் தான் நிறுவப்பட்டது.

   

மக்கள் படங்களை பார்த்து ஆச்சரியப்பட்ட காலம் என்றால் அது 1950 முதல் 1960 ஆம் ஆண்டு காலத்தில் தான். அடுத்தடுத்த சினிமாவின் வளர்ச்சிக்கு பல இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் முன்னோடியாக இருந்து வந்திருக்கிறார்கள். கேமரா, லென்ஸ், கதை, திரைக்கதை, படத்தொகுப்பு என தொடர்ந்து பல முன்னேற்றங்களை நம்மால் பார்க்க முடிகின்றது. முன்பிருந்த தொழில்நுட்பத்தை காட்டிலும் இப்போது பல தொழில்நுட்பங்கள் சினிமாவில் முன்னேறி இருக்கின்றது.

சினிமா தொடர்பாக பேசும் போது பலரும் கூறுவார்கள், இவர் அந்த காட்சியை சிங்கிள் டேக்கில் முடித்தார் என்று கூறுவார்கள். அப்படி சிங்கிள் டேக் என்றால் என்ன சிங்கிள் ஷாட் என்றால் என்ன என்பதை பார்ப்போம்.  கேமரா ஆன் செய்தால் படத்தில் வரும் அனைத்து காட்சிகளும் எடுத்து விட்டு தான் ஆப் செய்ய வேண்டும். இதில் சிங்கிள் ஷாட் என்றால் ஒரு காட்சியை கேமராவின் கோணங்களை மாற்றாமல் அப்படியே எடுப்பது என்பது சிங்கிள் ஷாட் . அந்த சிங்கிள் சார்ட்டில் ஒரு நடிகர் நடிக்கும் போது முதல் முறையே அதாவது முதல் முயற்சியிலேயே அந்த டேக் ஓகே ஆகிவிட்டால் அதுதான் சிங்கிள் டேக் என்று கூறுவார்கள்.

author avatar
Mahalakshmi