Connect with us

CINEMA

இதை நீங்க கவனிசீங்களா…? ‘லியோ’ திரைப்படத்தில் நடித்துள்ள மற்றொரு பிக் பாஸ் பிரபலம்…  அவரே வெளியிட்ட வீடியோ…

ரசிகர்களின் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஆக்டோபர் 19 ஆம் தேதி ரிலீசான சூப்பர் ஹிட் திரைப்படம்  ‘லியோ’. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் கோலிவுட் சினிமாவின் இந்த ஆண்டின் மிகப்பெரிய ரிலீசாக இப்படம் வெளியாகியுள்ளது. முன்னதாக இந்தாண்டில் வெளியான படங்களின் வசூலை எல்லாம் முறியடித்து வருகிறது ‘லியோ’. இதனால் பாக்ஸ் ஆபிஸில் புதிய சாதனைகளை படைத்து வருகிறது.

   

லோகேஷ் கனகராஜ், விஜய் இருவரும் இரண்டாவது முறையாக ‘லியோ’ படத்தில் இணைந்தனர். ஏற்கனவே இவர்களின் காம்போவில் ‘மாஸ்டர்’ ரிலீசாகி இருந்தாலும், அந்தப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. இதனால் லியோவை முழுக்க முழுக்க தன்னுடைய பாணியில் இயக்க போவதாக ஆரம்பத்தில் இருந்தே கூறி வந்தார் லோகேஷ் கனகராஜ்.

இத்திரைப்படத்தில் முழுக்க ஆக்ஷனில் விஜய் இறங்கி அடித்துள்ளதாகவும், லோகேஷ் தன்னுடைய பாணியில் எல்யூசிவில் லியோவை இயக்கியுள்ளதாகவும் தளபதி ரசிகர்கள் படத்தை கொண்டாடி வருகின்றனர். மற்றொரு பக்கம் லியோவிற்கு கலவையான விமர்சனங்களையும் குவித்து வருகிறது. இந்நிலையில் ‘லியோ’ படம் பாக்ஸ் ஆபிஸில் வசூல் வேட்டையை குவித்து வருகிறது. அதன்படி ரிலீசான முதல் நாளே 148.5 கோடி உலகம் முழுவதும் வசூலித்து சாதனை  படைத்தது.

சமீபத்தில் 461 கோடிக்கும் மேல் வசூல் செய்திருப்பதாக அதிகாரபூர்வ தகவலும் வெளிவந்தது. லியோ திரைப்படத்தில் எண்ணற்ற பிரபலங்கள் நடித்திருந்தனர். இவர்களில் பிக் பாஸ் ஜனனியும் ஒருவர். அவரைப்போலவே தற்பொழுது பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ள மாயாவும் லியோ திரைப்படத்தில் நடித்துள்ளார். இதுகுறித்து அவரே ஷூட்டிங் ஸ்பாட்டிலிருந்து வெளியிட்ட வீடியோவானது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ…

 

View this post on Instagram

 

A post shared by Maya S Krishnan (@mayaskrishnan)

Continue Reading

More in CINEMA

To Top