Connect with us

CINEMA

பிக் பாஸிலிருந்து வெளியேறிய யுகேந்திரன் முதலில் முதலில் எங்கு சென்றுள்ளார் தெரியுமா…?  வைரலாகும் புகைப்படம்…

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் ஹிட் ரியாலிட்டி ஷோக்களில் ஒன்று பிக் பாஸ். 6 சீசன்களை கடந்த இந்த நிகழ்ச்சியின் 7 வது சீசன் தற்பொழுது ஒளிபரப்பாகி வருகிறது.  ஆக்டோபர் 1 ஆம் தேதி தொடங்கப்பட்ட இந்த நிகழ்ச்சியானது இன்றுடன் 32 நாட்களை கடந்துள்ளது. ஒவ்வொரு நாளும் விறுவிறுப்புக்கும் , சண்டைக்கும் பஞ்சமில்லாமல் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது.

   

இதில் மொத்தம் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில், முதல் வாரம் அனன்யா, பாவா செல்லத்துரை, விஜய் வர்மா என 3 போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டிருந்தனர். இதைத்தொடர்ந்து பிக் பாஸ் வீட்டில் உள்ள மொத்தம் 15 போட்டியாளர்கள் இருந்தனர். இவர்களில் கடந்த வாரம் வினுஷா மற்றும் யுகேந்திரன் இருவரும் குறைந்த வாக்குகள் பெற்று வெளியேறினர். இவர்களை தொடர்ந்து 5 வைல்ட்  கார்டு போட்டியாளர்கள் தற்பொழுது பிக் பாஸ் வீட்டிற்குள் களமிறங்கியுள்ளனர்.

பிரபல பாடகர் மலேசியா வாசுதேவனின் மகன் தான் பாடகர் யுகேந்திரன். இவர் தமிழ் சினிமாவில் எக்கச்சக்க பாடல்களை பாடியிருக்கிறார்.  ‘பூவெல்லாம் உன் வாசம்’ திரைப்படத்தின் மூலம் நடிகராகவும் அறிமுகமானார். அதேபோல் விஜய் நடித்த யூத் படத்திலும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.  மலேசியா வாசுதேவன் மறைந்த பிறகு நியூசிலாந்தில் செட்டிலாகிவிட்டார் யுகேந்திரன். தமிழ் சினிமாவில் நடிப்பதையோ பாடுவதையோ சுத்தமாகவே நிறுத்திவிட்டார்.

வெளிநாட்டில் செட்டில் ஆன அவர் அங்கு ரம்புட்டான் மீடியா ஒர்க்ஸ் என்ற நிறுவனத்தை தொடங்கி உலகம் முழுவதும் இசை கான்செர்ட்டுகளை நடத்தி வந்தார். தற்பொழுது பிக் பாஸ் வீட்டை விட்டு குறைந்த வாக்குகள் பெற்று வெளியேறிய இவர், நேரடியாக நியூசிலாந்து சென்றுள்ளார். அங்கு அவர் குடும்பத்தோடு எடுத்துக் கொண்ட புகைப்படத்தை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவு செய்ய இப்புகைப்படம் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது. இதோ அந்த பதிவு…

Continue Reading

More in CINEMA

To Top