ரோபோ சங்கர் மகள் கல்யாணத்திற்கு இத்தனை கோடி செலவா ? என்னங்க சொல்றீங்க….

By Deepika

Published on:

ரோபோ சங்கர் மகள் இந்த்ரஜா சங்கர் மக்கள் மத்தியில் பிரபலமானவர். பிகில், விருமான் படங்கள் மூலம் பிரபலமான இவர் தன்னுடைய தாய் மாமனை கரம் பிடித்துள்ளார். இவர்களின் திருமணம் மதுரையில் கோலாகலமாக நடந்தது. இந்த திருமணத்தில் சின்னத்திரை, வெள்ளித்திரை நட்சத்திரங்கள் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

Indraja shankar wedding

இவர்களின் திருமணத்தை தனியார் யூட்யூப் சேனல் ஒளிபரப்பி வருகிறது. அந்த வீடியோவில் ரோபோ சங்கர் பேசும்போது, தன்னுடைய மகள் கல்யாணத்திற்கு தாங்கள் 3000 பேருக்கு அழைப்பு விடுத்திருந்தோம் ஆனால் வந்தது ஒன்பதாயிரத்திற்கு மேலே நபர்கள் வந்திருந்தார்கள் என்று சந்தோசமாக பேசியிருக்கிறார். எங்கு பார்த்தாலும் இவர்களின் வீடியோ தான்.

   
Indraja shankar reception

ரோபோ சங்கர், இந்த்ரஜா ரசிகர்கள் இதை வைரலாக்கி வருகின்றனர். இந்திரஜாவிற்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு நிச்சயதார்த்தம் முடிவடைந்து இருந்தது. நிச்சயதார்த்தத்திற்கு பிறகு தங்களுடைய மகளின் திருமணத்திற்கு பிரபலங்கள் பலருக்கும் குடும்பத்தோடு சென்று ரோபோ சங்கர் இன்விடேஷன் கொடுத்து வரவேற்று இருந்தார்.

Indraja shankar reception

இந்த நிலையில் ரோபோ சங்கர் எதிர்பார்த்ததுபடியே தன்னுடைய மகளின் திருமணத்தை பிரமாண்டமாக நடத்தி முடித்து இருக்கிறார். மதுரையில் திருமணம் நடைபெற்று இருந்தாலும் சென்னையில் திரை பிரபலங்கள் மற்றும் சின்னத்திரை பிரபலங்களுக்காக பெரிய அளவில் ரிசப்ஷன் நடத்தப்பட்டது.

Indraja shankar wedding cost

இதுகுறித்து ரோபோ சங்கர் பேசும்போது, நாங்கள் 3000 பேருக்கு அழைப்பு விடுத்திருந்தோம், ஆனால் 9 ஆயிரத்துக்கும் அதிகமானோர் வந்திருந்தனர். ஆனால் ஈவண்ட் மேனேஜ்மேண்ட் செய்த்தோர் சிறப்பாக கையாண்டார்கள் என கூறினார். வெட்டிங் பிளானர்ஸ் இதுபற்றி கூறும்போது, ரிசப்ஷனுக்கு மட்டுமே கிட்டதட்ட 1 1/2 கோடி செலவாகி இருக்கலாம் என்று கூறி வருகின்றனர். ஆனால் இந்த செலவுகள் குறித்து ரோபோ சங்கர் குடும்பத்தினர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.

 

author avatar
Deepika