பெண் சித்தரின் பின்னால் ஓடும் பொதுமக்கள் .. யார் இந்த தொப்பி அம்மா..?

By Deepika on சித்திரை 2, 2024

Spread the love

புண்ணியம் சேர வேண்டும் என்றால் கோவில்கள் செல்ல வேண்டும் என்பார்கள் ஆனால் நினைத்தாலே புண்ணியம் தரும் தலம் என்றால் அது திருவண்ணாமலை தான். இங்கு பல சித்தர்கள் இன்னும் கண்ணுக்கு தெரியாமல் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள் என்று நம்பப்படுகிறது. அப்படிப்பட்ட சித்தர்கள் பூமியான திருவண்ணாமலையில் பெண் சித்தர் ஒருவர் இருக்கிறார்.

Tiruvannamalai topi amma

இவரை தொப்பி அம்மா என அங்கிருக்கும் மக்கள் அழைக்கின்றனர். இவரை அங்குள்ள மக்கள் பெண் சித்தர் எனவும், கடவுள் எனவும் கூறுகினறனர். ஆனால் இவரோ வாய் பேச முடியாத பெண்மணி. அழுக்கு உடையும், ஜடை முடியும் கொண்டு பார்க்கவே கஷ்டமான தோற்றத்தில் இவர் இருக்கிறார். இவர் திருவண்ணாமலையை தினமும் இரண்டு மூன்று முறை சுற்றி வருகிறார், திருவண்ணாமலை கிட்டத்தட்ட 14 கிலோமீட்டர் உடையது. அதை தினமும் இவர் சுற்றி வருகிறார்.

   
   

Topi amma

 

இவர் தன்னை சித்தர் என எங்கும் கூறியது இல்லை, ஆனால் இவர் ஆசீர்வாதம் வழங்கினால் வாழ்க்கை செழிப்படையும் என பலர் இவர் பின்னால் செல்கின்றனர். சாப்பாடு வாங்கி தருபவர்களிடம் கூட சிலரது உதவியை மட்டும் தான் ஏற்கிறார். இவர் யாரிடமும் எதுவும் கேட்கவில்லை, டீ கடைக்கு முன்பு இவர் நின்றாள் கடைக்காரரே ஓடோடி வந்து டீ வழங்குவார். பல ஹோட்டல் ஊனர்களும் இவரை தங்கள் ஹோட்டலுக்கு சாப்பிட அழைக்கிறார்கள்.

Toppi amma blessings

பலர் இவர் காலில் விழுந்து ஆசி தரும்போது, சில நேரங்களில் அவர்களின் முடியை பிடித்து தள்ளி விடுகிறார். இப்படி மௌன சித்தரான இவர் இப்போது மிக பிரபலமாகி விட்டார். ஆந்திரா, கேரளா ஏன் வட இந்தியர்கள், வெளிநாட்டவர்கள் கூட தொப்பி அம்மாவை தேடி வருகிறார்கள். ஆனால் தொப்பி அம்மா எதையும் கன்டுகொள்ளாமல் அவர் கிரிவலத்தை தினமும் தொடர்கிறார். இவர் உண்மையிலேயே பெண் சித்தரா இல்லை மனநலம் பாதிக்கப்பட்டவரா என தெரியவில்லை. ஆனால் யாருக்கும் தொந்தரவு தராமல், அமைதியாக திருவண்ணாமலையிலேயே இருக்கிறார்.