18 வருடங்களுக்கு பிறகு மீண்டும் திரையில் ஒன்றாக இணையும் சூர்யா-ஜோதிகா ஜோடி.. அதுவும் இந்த ரொமான்டிக் இயக்குனரா..?

By Priya Ram

Published on:

சினிமாவில் ரியல் ஜோடிகளாக இருந்தவர்கள் நிஜத்திலும் காதலித்து ரியல் ஜோடிகளாக மாறுகின்றனர். அப்படி காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள் தான் சூர்யா ஜோதிகா தம்பதியினர். இருவரும் திரை துறையில் முன்னணி நட்சத்திரங்களாக வலம் வந்தனர். இன்று வரை சூர்யா ஜோதிகா தம்பதியினருக்கு ரசிகர்களுடைய நல்ல வரவேற்பு உள்ளது.

   

சூர்யாவும் ஜோதிகாவும் இணைந்து பூவெல்லாம் கேட்டுப்பார், உயிரிலே கலந்தது, காக்க காக்க, பேரழகன், மாயாவி, சில்லுனு ஒரு காதல் உள்ளிட்ட சூப்பர் ஹிட் படங்களில் நடித்துள்ளனர். இருவரும் இணைந்து நடித்த படங்கள் மக்களிடைய நல்ல வரவேற்பை பெற்றது. கடைசியாக சூர்யா ஜோதிகாவுடன் இணைந்து நடித்த சில்லுனு ஒரு காதல் படத்திற்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.

Jyothika

திருமணத்திற்கு பிறகு சினிமாவில் இருந்து விலகிய ஜோதிகா குடும்பம் மற்றும் குழந்தைகளை கவனித்துக் கொள்வதில் நேரம் செலுத்தினார். நீண்ட இடைவெளிக்கு பிறகு 36 வயதினிலே திரைப்படம் மூலம் சினிமாவில் ரீ-என்ட்ரி கொடுத்தார் ஜோதிகா. அதன் பிறகு பெண்களுக்கு முக்கியத்துவம் முக்கியத்துவம் தரும் படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இதே போல பிரபல நடிகரான சூர்யாவும் அடுத்தடுத்த படங்களில் பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறார்.

தற்போது சிறுத்தை சிவா இயக்கிய கங்குவா படத்தில் சூர்யா நடித்து முடித்துள்ளார். இந்த படம் விரைவில் திரைக்கு வர உள்ளது. இந்த நிலையில் சூர்யாவும் ஜோதிகாவும் சுமார் 18 வருடங்களுக்குப் பிறகு ரொமான்டிக் படத்தில் இணைந்து நடிக்க உள்ளார்களாம். அந்த படத்தை ஹலிதா சமீம் அஞ்சலி மேனன் ஆகியோர் இயக்க உள்ளனர். இருவரும் இணைந்து ஏற்கனவே பூவரசம் பீபீ, சில்லு கருப்பட்டி, ஏலே, புத்தம் புது காலை, விடியாதா உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளனர். இத்தனை வருடத்திற்கு பிறகு சூர்யாவும் ஜோதிகாவும் இணைந்து நடிக்க போவதை அறிந்ததும் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

author avatar
Priya Ram