பிரபல நடிகையான வாணி போஜன் ஒரு விமான சேவையில் ஏர் ஹோஸ்டர்ஸ்சாக வேலை பார்த்தார். அப்போதுதான் அவருக்கு சீரியல் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. சன் டிவியில் ஒளிபரப்பான தெய்வமகள் சீரியலில் வாணி போஜன் ஹீரோயினாக நடித்தார்.
அந்த சீரியல் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அடுத்ததாக ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான லட்சுமி வந்தாச்சு சீரியலில் நடித்தார்.
ஆரம்பத்தில் வாணி போஜன் நடித்த படங்கள் மக்களிடைய அவ்வளவாக வரவேற்பை பெறவில்லை. பின்னர் அசோக் செல்வனுடன் இணைந்து நடித்த ஓ மை கடவுளே அவருக்கு நல்ல திருப்பு முனையாக அமைந்தது.
இதனையடுத்து லாக்கப், மலேசியா டூ அம்னீஷியா, ராமர் ஆண்டாளும் ராவண ஆண்டாளும், பாயும் ஒளி நீ எனக்கு, லவ் உள்ளிட்ட படங்களில் வாணி போஜன் நடித்தார். ஒரு சில வெப் சீரிஸிலும் நடித்து வருகிறார். தற்போது பகைவனுக்கு அருள்வாய், கேசினோ, ஆரியன் போன்ற படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.
சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் வாணி போஜன் தற்போது ஜொலிக்கும் உடை அணிந்து டீப் நெக் தெரிய போட்டோ எடுத்து புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவி வருகிறது.