என் காதலுக்கு அப்பா சொன்னது ; படையப்பா ரஜினி தான் எங்கப்பா… முதல்முறையாக உண்மையை உடைத்த கே.எஸ்.ரவிக்குமாரின் மூன்று மகள்கள்

By Deepika on ஏப்ரல் 2, 2024

Spread the love

தமிழ் சினிமாவில் மிகப்பெரிய கமர்ஷியல் இயக்குனர் என்றால் அது கே.எஸ்.ரவிக்குமார் தான். ரஜினி, கமல், அஜித், விஜய் என அனைவருக்கும் சூப்பர்ஹிட் கொடுத்த ஒரே இயக்குனர் இவர் தான். இன்றும் நாம் படையப்பா படத்தை விரும்பி பார்க்கிறோம் என்றால் அதற்கு முக்கியமான காரணம் கே.எஸ்.ரவிக்குமாரின் மேக்கிங் தான். அப்படிப்பட்ட பெரிய இயக்குனரின் பெர்ஷனல் வாழ்க்கை குறித்து பெரிதும் யாருக்கும் தெரியாது.

KS Ravikumar family

பெற்றோர்கள் பார்த்து வைத்த திருமணம் தான் இவருடையது, இவரது மனைவியின் பெயர் கற்பகம். இவருக்கு மூன்று பெண் குழந்தைகள் உள்ளனர். ஆச்சர்யம் என்னவென்றால் இவர்கள் மூவருமே சினிமாவில் இல்லை. பெரிய மகள் ஜனனி பிஸினஸ் செய்கிறார், இரண்டாவது மகள் மாலிக்கா லைஃப் கோச்சாக உள்ளார். கடைசி மகள் தஸ்வந்தி டாக்டராக உள்ளார். இவர்கள் மூவரும் கே.எஸ்.ரவிக்குமார் குறித்து பல விஷயங்களை சமீபத்திய பேட்டியில் பகிர்ந்து கொண்டனர்.

   
   

KS Ravikumar daughters

 

அப்போது தான் இவருக்கு மூன்று மகள்கள் இருக்கின்றனர் என அனைவருக்கு தெரிந்தது. அவர்கள் கூறியதாவது, அப்பா ரொம்ப அன்பானவர், ஆனால் வீடு அவரின் கன்ட்ரோலில் தான் இருக்கும். அம்மா சமைத்தால் கூட குறை சொல்வார், ஆனால நாங்கள் சமைத்தது எவ்வளவு மோசமாக இருந்தாலும் நன்றாக இருக்கு என்பார். அதேபோல் எங்களிடம் நண்பர் போல் பழகுவார், நாங்கள் எதுவாக இருந்தாலும் எங்கள் அப்பாவிடம் சொல்லிவிடுவோம்.

Maalica ravikumar about her father KS Ravikumar

ரவிக்குமாரின் இரண்டாவது மகள் மாலிக்கா அவரின் காதல் திருமணத்திற்கு அப்பா எப்படி ரியாக்ட் செய்தார் என கூறியுள்ளார். அவர் கூறியுள்ளதாவது, ஒருநாள் நானும் அப்பாவும் மட்டும் காரில் பயணித்து கொண்டிருந்தோம், அப்பா என்னிடம் என்னடா, இரண்டு மாதங்களாக போன் அதிகம் பயன்படுத்துவது போல் தெரிகிறது என்ன என்று கேட்டார். நான் உடனே அப்பா, நான் ஒருவரை காதலிக்கிறேன் என உண்மையை சொல்லிவிட்டேன். அப்பாவும் ரொம்ப கேசுவலாக சரி என்றார். அப்படிதான் என் திருமணம் நடந்தது. அப்பா அந்த காலத்து ஆளாக இருந்தாலும், இந்த தலைமுறைக்கு ஏற்றவாறு தன்னை மாற்றிக் கொண்டார் என கூறியுள்ளார்.