1500 கோடி ரூபாய் சொத்துக்காக தான் 2-வது திருமணம்.. பிரபல நடிகையின் முன்னாள் கணவர் பரபரப்பு பேட்டி..!!

By Priya Ram

Published on:

தெலுங்கு முன்னணி நடிகரான மகேஷ் பாபுவின் சகோதரர்தான் நரேஷ் பாபு. இவர் தெலுங்கு படங்களிலும் ஒரு சில ஹிந்தி படங்களிலும் நடித்துள்ளார். தமிழில் பொருத்தம், நெஞ்சத்தை அள்ளி தா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். நடிகர் நரேஷ் பாபுவிற்கு ஏற்கனவே மூன்று திருமணம் ஆனது.

   

இந்த நிலையில் கன்னட நடிகையான பவித்ரா என்பவரை நரேஷ் பாபு 2-வதாக திருமணம் செய்துள்ளார். இதில் பவித்ராவும் ஏற்கனவே திருமணம் ஆகி விவாகரத்து பெற்றவர். முதலில் பவித்ரா கன்னட நடிகரான சுரேந்திர பிரசாத் என்பவரை தான் திருமணம் செய்து கொண்டார்.

இந்த தம்பதியினருக்கு ஒரு மகன் உள்ளார். பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து விட்டனர். கடந்த வருடம் சுரேந்திர பிரசாத் ஒரு பேட்டியில் கூலிப்படையை வைத்து பவித்ரா தன்னை கொலை செய்ய முயற்சி செய்வதாக கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.

இந்த நிலையில் மீண்டும் சுரேந்திர பிரசாத் அளித்த பேட்டியில் கூறியதாவது, பவித்ரா எப்போதுமே ஆடம்பர வாழ்க்கையை தான் விரும்புவார். அதனால் தான் நரேஷ் பாபுவை இரண்டாவதாக திருமணம் செய்தார். பணத்திற்காக பவித்ரா என்ன வேண்டுமானாலும் செய்வார். நரேஷ் பாபிவிடம் சுமார் 1500 கோடி ரூபாய் சொத்து இருப்பதால் பவித்ரா அவருக்கு நான்காவது மனைவியாக சம்மதம் தெரிவித்து திருமணம் செய்து கொண்டார் என கூறியுள்ளார்.

author avatar
Priya Ram