காலையிலேயே இபிஎஸ்-க்கு ஷாக்… திடீரென அந்தர் பல்டி அடித்த செங்கோட்டையன்… அதிமுகவில் அடுத்த பரபரப்பு…!

By Nanthini on ஐப்பசி 24, 2025

Spread the love

தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறுவதற்கு இன்னும் சில மாதங்கள் மட்டுமே உள்ளதால் தற்போது தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கிவிட்டது. அதிமுக மற்றும் திமுக இடையே போட்டி என்ற நிலை மாறி தற்போது விஜய்யும் களத்தில் இறங்கியுள்ளதால் 2026 தேர்தல் களம் பரபரப்பாக பார்க்கப்படுகிறது. இதனிடையே இபிஎஸ் பாஜகவுடன் கூட்டணி அமைத்ததால் கட்சி நிர்வாகிகள் பலரும் அதிருப்தியில் உள்ளதாக தெரிகிறது. அதன் எதிரொலியாக கடந்த மாதத்தில் செங்கோட்டையன் பிரிந்து கிடக்கும் அதிமுகவை மீண்டும் ஒன்றிணைக்க வேண்டும் என்று கூறி இபிஎஸ்ஸுக்கு 10 நாட்கள் கெடு விதித்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து செங்கோட்டையனை கட்சியின் அனைத்து பதவிகளில் இருந்தும் நீக்கி இபிஎஸ் உத்தரவிட்டார். இது அதிமுகவில் பெரும் பரபரப்பை கிளப்பி இருந்தது. இதனைத் தொடர்ந்து செங்கோட்டை டெல்லி சென்று அமித்ஷாவை சந்தித்து பேசி இருந்தார். அந்த சந்திப்புக்குப் பிறகு அமைதி காத்து வந்தார். இந்நிலையில் கட்சிக்கு கெடு எதுவும் விதிக்கவில்லை என்றும் பத்து நாட்களில் பேச்சுவார்த்தை தொடங்க வேண்டும் என்று கூறியதாகவும் அவர் புதிய விளக்கத்தை கொடுத்துள்ளார். திடீரென செங்கோட்டையன் அந்தர்பல்டி அடித்தது இபிஎஸ்ஸுக்கு அதிர்ச்சியாக அமைந்துள்ளது.