வந்தது புதிய அறிவிப்பு..! ரூ.1,000 மகளிர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பித்துள்ளீர்களா…? வெளியான குட் நியூஸ்…!!

By Soundarya on ஐப்பசி 23, 2025

Spread the love

தமிழகத்தில் குடும்பத் தலைவிகளுக்கு மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் கீழ் மாதம்தோறும் ஆயிரம் ரூபாய் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் பலருடைய விண்ணப்பங்களும் நிராகரிக்கப்பட்ட நிலையில் மீண்டும் தகுதி உள்ளவர்களுக்கு மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும் என அரசு சார்பில் அறிவிக்கப்பட்டு இருந்தது. இதனைத் தொடர்ந்து உங்களுடன் ஸ்டாலின் முகாம் மூலமாக தற்போது பலரும் மகளிர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பித்து வருகிறார்கள்.

இந்நிலையில்  புதிதாக விண்ணப்பித்தவர்களுக்கு டிச. 15-ம் தேதி மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும் என DCM உதயநிதி ஸ்டாலின் சமீபத்தில் அறிவித்துள்ளார். இதுவரை, 28 லட்சம் பேர் இதற்கு விண்ணப்பித்துள்ள நிலையில் அவர்களது மனுக்கள் மீதான களஆய்வு பணிகள் ஏற்கெனவே தொடங்கிவிட்டன. மேலும் நவம்பர்  15 வரை விண்ணப்பிக்க அவகாசம் உள்ளது. அனைத்து பணிகளும் நவ.30-க்குள் முடிந்து டிசம்பரில் புதிய பயனர்களுக்கு பணம் டெபாசிட் செய்யப்பட உள்ளது.