AI டெக்னாலஜி வரவால் பல நிறுவனங்கள் ஆள் குறைப்பு செய்து வருகின்றன. அமேசான் நிறுவனமும் 2027 ஆம் ஆண்டுக்குள் 1,60,000 பணியாளர்களை நீக்கிவிட்டு அதற்கு பதிலாக ரோபோக்களை பணியமர்த்த திட்டமிட்டுள்ளது. இது பற்றி கருத்து தெரிவித்துள்ள எலான் மஸ்க், AI-யும் ரோபோக்களும் இனி எல்லா வேலைகளையும் எடுத்துக் கொள்ளும். மனிதர்கள் விரும்பினால் காய்கறிகள் வளர்ப்பது போன்ற வேலைகளை செய்யலாம் என்று அவர் X தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
மேலும் ஏஐ மற்றும் ரோபோக்கள் தற்போதைய வேலைகளை தானாக செய்யும் நிலை உருவாகும் போது, மக்கள் தங்கள் விருப்பத்தின் அடிப்படையில் மட்டுமே செயல்படுவார்கள் என்று அவர் விளக்கினார். இந்த பதிவு தற்போது இளைஞர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
