அர்ச்சனா இவ்வளவு வாக்குகள் வித்தியாசத்துல வின் பண்ணிருக்கங்களா? மிரளவைக்கும் வாக்கு எண்ணிக்கை!

By Deepika on தை 15, 2024

Spread the love

பிக் பாஸ் நிகழ்ச்சியில் அர்ச்சனா வாங்கிய வாக்குகள் இதுவரை இந்நிகழ்ச்சியில் யாரும் வாங்கவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது. விஜய் டிவியில் மூன்று மாதங்களுக்கு மேலாக  பரபரப்பாக பிக் பாஸ் நிகழ்ச்சி  ஒளிபரப்பகிவந்தது.இந்நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிவருகிறார். இது ஆறு சீசன்களை கடந்து 7 வது  சீசனை வெற்றிகரமாக நடத்திவந்தது.  இதில் 24  போட்டியாளர்கள் கலந்து கொண்டனர்.

   

இந்நிகழ்ச்சியில் 30 நாட்கள் கழித்து வைல்ட் கார்டு என்ட்ரியாக வந்தவர்கள் அர்ச்சனா, தினேஷ், பிராவோ , கானா பாலா  கலந்து கொண்டனர்.இதில் அர்ச்சனா , தினேஷ் மட்டிமே இறுதி வரை தொடர்ந்து நீடித்தனர். இந்த நிலையில் கடந்தவாரம்  டாப் 5  பைனலிஸ்ட் ஆகா  மணி,விஷ்ணு,மாயா,தினேஷ் மற்றும் அர்ச்சனா இருந்தனர்.

   

இந்நிகழ்ச்சிக்கான பைனல் நேற்று வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. பின்னர் கடைசி இரண்டு பைனலிஸ்ட் ஆக  மணி மற்றும் அர்ச்சனா  இருந்த நிலையில் இறுதி வின்னராக  அர்ச்சனாவும்,  ரன்னராக  மணியும் வெற்றி பெற்றுள்ளனர். இந்நிலையில் ரசிகர்கள் இவர்களுக்கு தங்களது வாழ்த்துகளை கூறி வருகின்றனர்.இதனை தொடர்ந்து இந்த நிகழ்ச்சிக்கான வாக்கு பட்டியல்  வைரலாக பரவி வருகிறது. இது அதிகாரப்பூர்வமான  தகவலாக இல்லை என்றாலும் இதன் அடிப்படையில்  பார்க்கும் போது அர்ச்சனா இதுவரை இந்நிகழ்ச்சியில் யாரும் வாங்காத அளவு அதிக  வாக்குகளை பெற்றுள்ளார்.

 

தற்போது சமூக வலைதளங்களில் வெளியான தகவலின் படி அர்ச்சனா  சுமார் 19 கோடி  வாக்குகளை பெற்றுள்ளதகவும்  மணி 7 கோடி வாக்குகளை பெற்றுள்ளதாகவும் கூரப்படுகிறது.   இது அதிகாரப்பூர்வமானா தகவலாக இருக்கும் பட்சத்தில்   பிக் பாஸ் நிகழ்ச்சியின் வரலாற்றிலேயே அதிக வாக்குகளை  பெற்ற வெற்றியாளராக அர்ச்சனா  இருப்பார் . இதற்கு முன்  ஆரி அவர்கள் 16 கோடி  வாக்குகளை  பெற்று முன்னிலையில் இருந்தார்.மேலும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் 2 வது பெண் வெற்றியாளர் இவர் என்பது குறிப்பிட தக்கது.