பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்தவுடன் மாயா தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்ட முதல் பதிவு.. கமெண்ட் பக்கத்தில் கழுவி ஊத்தும் ரசிகர்கள்… 

By Begam on தை 15, 2024

Spread the love

விஜய் தொலைக்காட்சியில் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி ஆனது வெற்றிகரமாக ஒளிபரப்பாகி நிறைவடைந்துள்ளது. இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் மொத்தம் 23 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர.  இவர்களில் விசித்ரா பிக் பாஸ் நிகழ்ச்சியின் டைட்டில் வின்னர் ஆவார் என்று ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவரது வெளியேற்றம் ரசிகர்களை பெரிதும் ஏமாற்றமடைய செய்தது.

   

இதற்கு முன்னர் பிரதீப்பின் ரெட் கார்டு விவகாரம் இணையத்தில் பேசு பொருளாக மாறி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதை தொடர்ந்து பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஃபைனலிஸ்டாக அர்ச்சனா, மணி ,மாயா, தினேஷ், விஷ்ணு ஐந்து போட்டியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவர்களில் யார் பிக் பாஸ் டைட்டிலை வெல்வார்கள் என்ற  எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் தொடங்கியது.

   

 

ஆனால் ரசிகர்கள் பலரும் அர்ச்சனா தான் டைட்டிலை  வெல்வார் என்று திடமாக கூறி வந்தனர். ஆனால் பிக் பாஸ் நிகழ்ச்சி ஆரம்பித்த நாள் முதலே கமலஹாசனின் ஆதரவு மாயாவிற்கே இருந்து வந்தது. அவர் செய்த எந்த ஒரு செயலையும் அவர் தட்டி கேட்டதே கிடையாது. என்று ஒரு புறம் மாயா தான் டைட்டிலை வெல்வார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து வந்தனர். இந்நிலையில் அனைவருக்கும் ட்விஸ்ட் கொடுத்து கமலஹாசன் அர்ச்சனாவின் கையை தூக்கி வெற்றியாளர் என அறிவித்தார்.

இதை தொடர்ந்து மணி இரண்டாவது இடத்தையும், மாயா மூன்றாவது இடத்தையும் பிடித்தார். இந்நிலையில் டைட்டில் கிடைக்காத விரக்தியில் மாயா தனது insta பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் பூர்ணிமா, ஐசு, அனன்யா உடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து ‘கையில் என்ன கொண்டு வந்தோம். கொண்டு செல்ல’ இன்று அவர் கூறியுள்ளார். இப்பதிவினை பார்த்த நெட்டிசன்கள், ‘ ஃபர்ஸ்ட் பிரதீப் கிட்ட சாரி கேளு என்றும், மானம், சூடு, சொரணை அது உனக்கு புரியாது’ என்றும் பலவாறு கமெண்ட் பக்கத்தில் அவரை திட்டி தீர்த்து வருகின்றனர். இதோ அந்த பதிவு…

 

View this post on Instagram

 

A post shared by Maya S Krishnan (@mayaskrishnan)