அப்படி போடு.. ‘பிக் பாஸ்’ டைட்டில் வின்னர் அர்ச்சனாவுக்கு கிடைத்த மிகப்பெரிய பரிசு… 50 லட்சம் இல்லாமல் இது வேறயா..?

By Begam on தை 15, 2024

Spread the love

விஜய் தொலைக்காட்சியில் கடந்த அக்டோபர் 1ம் தேதி தொடங்கப்பட்ட சூப்பர் ஹிட் ரியாலிட்டி ஷோ தான் பிக் பாஸ் சீசன் 7. இந்நிகழ்ச்சி ஜனவரி 14-ஆம் தேதியான நேற்றுடன்  நிறைவு பெற்றது. ஒட்டுமொத்தமாக இந்த சீசனில் 23 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். இவர்களில் வைல்ட் கார்ட் என்ட்ரி மூலம் 5 போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்தனர் .

   

முழுக்க முழுக்க இந்த சீசனில் போட்டியாளர்கள் டாஸ்குகளை விட அதிக சண்டைகளையும், வன்மத்தையும் மட்டுமே நிகழ்ச்சியில் காட்டினார்கள்.  இரண்டு வீடுகள் என பிரித்து வைக்கப்பட்ட வீடுகள், இரண்டு பகுதிகளாக பிரிக்கப்பட்ட போட்டியாளர்கள் சண்டை சச்சரவு என சென்ற இந்த சீசனில் பிக் பாஸ் டைட்டில் வெல்லப்போவது யார் என்றும் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய ஆவலை ஏற்படுத்தியது.

   

 

இந்நிலையில் போட்டியின் இறுதியில் விஷ்ணு, மாயா, தினேஷ், அர்ச்சனா மற்றும் மணி என ஐந்து பேர் ஃபைனலிஸ்டாக தேர்வாகியிருந்தனர்.  இவர்களில் அதிகமான வாக்குகள் பெற்று அர்ச்சனா தான் டைட்டில் வின்னராக தேர்ந்தெடுக்கப்படுவார் என்று ரசிகர்களால் பெரிதும் ஆவலாக எதிர்பார்க்கப்பட்டார் .

முதன்முறையாக பிக் பாஸ் வரலாற்றில் வைல்ட் கார்டு என்ட்ரியில் நுழைந்த அர்ச்சனா பிக் பாஸ் டைட்டிலை தட்டி தூக்கியுள்ளார். இந்நிலையில் டைட்டில் வின்னர் அர்ச்சனாவுக்கு 50 லட்சம் பரிசுத்தொகை வழங்கப்பட்டது. 15 லட்சம் ரூபாய்க்கு ஒரு பிளாட்டும் மற்றும் ஒரு காரும் பரிசாக வழங்கப்பட்டுள்ளது. அந்த காரின் பேசிக் மாடல் விலை மட்டும் சுமார் 15 லட்சம் என்பது குறிப்பிடத்தக்கது . மொத்தமாக சம்பளம் மட்டுமின்றி டைட்டில் ஜெயித்ததன் மூலம் 80 லட்சம் வரை பரிசாக ரூபாய் பரிசாக அர்ச்சனாவுக்கு வாரி வழங்கியுள்ளார் பிக் பாஸ்.