Connect with us

CINEMA

ரசிகர்களுக்கு பொங்கல் வாழ்த்து கூற வந்த ரஜினி , டென்சன் ஆன பக்கத்து வீட்டு பெண்மணி – பண்டிகை நாள் வந்துட்டா இதே தொல்லையா போச்சே!

சென்னை போயஸ்கார்டனில் நடிகர் ரஜினிகாந்த் வீடு உள்ளது. புத்தாண்டு நாட்கள், பொங்கல், தீபாவளி போன்ற பண்டிகை நாட்களில், ரஜினி வீட்டின் முன் நூற்றுக்கணக்கான ரசிகர்கள் திரண்டு விடுவது வழக்கம். அதிகாலை முதலே அந்த பகுதியில் சேர்ந்து விடும் ரசிகர் கூட்டம் தலைவா, தலைவா என கூச்சலிட ஆரம்பிக்கும். அப்போது ரஜினி திடீரென ரசிகர்களுக்கு காட்சி தருவார். சில நேரங்களில் கேட்டுக்கு வெளியே வந்து ரசிகர்களை சந்தித்து, கையசைத்து கும்பிட்டு வாழ்த்து சொல்வார். பல நேரங்களில் காம்பவுண்ட் சுவருக்கு பின்னால், பெஞ்ச் மீது ஏறி நின்று, கையை காட்டி கும்பிவிட்டு சென்று விடுவார்.

   

கடந்த புத்தாண்டு அன்று அப்படித்தான் தனது வாழ்த்துகளை ரஜினி இதே போல் பெஞ்ச் மீது ஏறி நின்று தெரிவித்தார். ஆனால், கடந்த தீபாவளியன்று ரஜினிகாந்த் வெளியே வரவில்லை. இதனால் மணிக்கணக்கில் காத்திருந்த ரசிகர்கள், சிவனே வெளியே வா, அருணாசலனே வெளியே வா, தலைவா வெளியே வா, ஜெயிலரே வா என கூச்சலிட்டும் கடைசி வரை ரஜினி வரவே இல்லை. இது ரசிகர்களை ஏமாற்றத்தில் ஆழ்த்தியது. ஆனால் ரஜினி பிறந்த நாளில் மட்டும் ரஜினிகாந்த் வீட்டின் முன் திரள மாட்டார்கள். ஏனெனில் அன்று ரசிகர்கள் தன்னை சந்திக்க வரவேண்டாம் என ரஜினிகாந்த் ஏற்கனவே அறிவித்துள்ளார். ஒவ்வொரு பிறந்த நாள் அன்றும் அவர் ரசிகர்களை சந்திப்பது தவிர்ப்பது வழக்கமாகவே உள்ளது.

இந்நிலையில் இன்று தைப்பொங்கல் நாளில் ரஜினியை காண, வழக்கம்போல ரஜினி ரசிகர்கள் போயஸ்கார்டனில் உள்ள ரஜினி வீட்டின் முன் திரண்டனர். கையில் அவரது புகைப்படங்களை வைத்துக்கொண்டு தலைவா, தலைவா என பெருங்குரலில் கூச்சலிட ஆரம்பித்தனர். மணிக்கணக்கில் இது தொடர்ந்ததால், ரஜினி வீட்டுக்கு பக்கத்து வீட்டில் உள்ள 60 வயது மதிக்கத்தக்க பெண்மணி ஒருவர் அங்குள்ள ரசிகர் கூட்டத்தை பார்த்து திட்டுகிறார்.

அப்போது, பண்டிகை காலம் வந்துட்டா எங்களை போல கஷ்டப்படறவங்க யாருமே கிடையாது. ஏதாவது பண்டிகை வந்துட்டால் போதும். தலைவா, தலைவா வந்து கத்த ஆரம்பிச்சிடறாங்க. நிம்மதியா சாமி கும்பிட முடியலை, பிரார்த்தனை பண்ண முடியலை. உங்க வீட்டு கேட்ட திறந்து விடுங்க, உங்க தலைவர் வீட்ட எல்லாரும் பார்த்துட்டு போகட்டும், என்று கோபமாக திட்டுகிறார். அந்த வீடியோ இப்போது வைரலாகி வருகிறது.

author avatar
Sumathi
Continue Reading

More in CINEMA

To Top