தமிழ் திரையுலகில் உள்ள முன்னணி நட்சத்திரங்களில் ஒருவர் தான் நடிகர் தனுஷ். இவர் நடிப்பில் தற்பொழுது கேப்டன் மில்லர் திரைப்படம் உருவாக்கி வருகிறது. இத்திரைப்படத்தை எதிர்பார்த்து ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். இவர் தற்பொழுது வரை திரையுலகின் முன்னணி ஹீரோவாகவும், பிஸியாகவும் பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து வருகிறார்.
நடிகர் தனுஷ் அவர்களுக்கு இயக்குனர் செல்வராகவன் அண்ணனும், விமலா கீதா, கார்த்திகா தேவி என்ற இரண்டு அக்காவும் உள்ளனர். இவர்கள் இருவரும் மருத்துவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. நடிகர் தனுஷின் அக்காவான கார்த்திகா தேவி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர். இவர் தற்பொழுது தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் வருத்தத்துடன் புகைப்படம் ஒன்றை பதிவு செய்துள்ளார்.
நடிகர் விஜய் ஆண்டனியின் மகள் மீரா மர்மமான முறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனால் மொத்த திரையுலகமே சோகத்தில் மூழ்கியது. இதற்கான உண்மைக்காரணம் என்னெவென்று இதுவரை தெரியவில்லை. இதைத்தொடர்ந்து நடிகர் விஜய் ஆண்டனி மறைந்த மகளின் மறைவு குறித்து உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். தற்பொழுது இப்பதிவினை பார்த்து ‘என்னால் என் கண்களிலிருந்து வரும் கண்ணீரை அடக்க முடியவில்லை. இது எந்த பெற்றோருக்கும் ஏற்படக்கூடாத வலி’ என கூறி வருத்தத்துடன் தெரிவித்துள்ளார் நடிகர் தனுஷின் அக்கா கார்த்திகா தேவி. இதோ அந்த புகைப்படம்….
ஸ்பெயினைச் சேர்ந்த காவல்துறை தம்பதியரான ஜெசிகா முனோஸ் பரேடஸ் மற்றும் பெலாயோ அல்வாரெஸ் ரெவூல்டா ஆகியோர், ஒருவருக்கொருவர் கைவிலங்கு அணிந்தபடி…
குவஹாத்தி செல்லும் ரயிலில் பயணம் செய்த அமித் அவஸ்தி என்ற பயணி, தனது உணவில் பாதிக்கு மேல் சாப்பிட்ட பிறகு…
அசாம் ரயில் விபத்து நிகழ்வதற்குச் சற்று முன்பு, ரயில் இன்ஜின் அறைக்குள் எடுக்கப்பட்டதாகக் கூறப்படும் ஒரு வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.…
டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை வளாகத்தில் வைக்கப்பட்டுள்ள இந்திய மக்கள் தொகை கணக்கீட்டு பலகையின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.…
மகாராஷ்டிர மாநிலம் ராய்காட் மாவட்டம் பன்வெல் அருகே உள்ள களம்போலி பகுதியில் கடந்த திங்கள்கிழமை இரவு காவல்துறையினர் வழக்கமான 'நாகாபந்தி'…
கன்னியாகுமரி மாவட்டம், கருங்கல் அருகேயுள்ள மத்திக்கோடு பகுதியில் நிகழ்ந்த கோர இருசக்கர வாகன விபத்தில், பூதப்பாண்டியைச் சேர்ந்த 13 வயது…