‘என் கண்ணீரை என்னால் நிறுத்த முடியவில்லை. இது பெற்றோரின் வலி’…! விஜய் ஆண்டனி பதிவிற்கு தனுஷ் அக்கா தெரிவித்த வருத்தம்…!

By Begam on புரட்டாதி 24, 2023

Spread the love

தமிழ் திரையுலகில் உள்ள முன்னணி நட்சத்திரங்களில் ஒருவர் தான் நடிகர் தனுஷ். இவர் நடிப்பில் தற்பொழுது கேப்டன் மில்லர் திரைப்படம் உருவாக்கி வருகிறது. இத்திரைப்படத்தை எதிர்பார்த்து ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். இவர் தற்பொழுது வரை திரையுலகின் முன்னணி ஹீரோவாகவும், பிஸியாகவும் பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து வருகிறார்.

   

நடிகர் தனுஷ் அவர்களுக்கு இயக்குனர் செல்வராகவன் அண்ணனும்,  விமலா கீதா, கார்த்திகா தேவி என்ற இரண்டு அக்காவும் உள்ளனர். இவர்கள் இருவரும் மருத்துவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. நடிகர் தனுஷின் அக்காவான கார்த்திகா தேவி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர். இவர் தற்பொழுது தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் வருத்தத்துடன் புகைப்படம் ஒன்றை பதிவு செய்துள்ளார்.

   

 

நடிகர் விஜய் ஆண்டனியின் மகள் மீரா மர்மமான முறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனால் மொத்த திரையுலகமே சோகத்தில் மூழ்கியது. இதற்கான உண்மைக்காரணம் என்னெவென்று இதுவரை தெரியவில்லை. இதைத்தொடர்ந்து நடிகர் விஜய் ஆண்டனி மறைந்த மகளின் மறைவு குறித்து உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். தற்பொழுது இப்பதிவினை பார்த்து ‘என்னால் என் கண்களிலிருந்து வரும் கண்ணீரை அடக்க முடியவில்லை. இது எந்த பெற்றோருக்கும் ஏற்படக்கூடாத வலி’ என கூறி வருத்தத்துடன் தெரிவித்துள்ளார் நடிகர் தனுஷின் அக்கா கார்த்திகா தேவி. இதோ அந்த புகைப்படம்….