பிரபல இயக்குனரான ஷங்கர் எஸ்.பிக்சர்ஸ் என்ற திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். முன்னதாக சங்கர் எஸ்.ஏ சந்திரசேகரிடம் உதவி இயக்குனராக வேலை பார்த்துள்ளார். இவர் ஜென்டில்மேன், இந்தியன், ஜீன்ஸ், முதல்வன், பாய்ஸ், அந்நியன், எந்திரன், நண்பன், ஐ, 2.0 உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார்.

இயக்குனர் சங்கர் என்றாலே பிரம்மாண்டத்திற்கு பஞ்சமே இல்லை. படத்திற்கு அவர் செலவு செய்வதை விட அதில் இருக்கும் பாடல்களுக்கு பல கோடி ரூபாய் சங்கர் செலவு செய்வார். அப்படி சங்கர் அதிகமாக செலவு செய்த 4 பாடல்கள் குறித்து பார்ப்போம்.
முதலாவதாக கடந்த 1999-ஆம் ஆண்டு அர்ஜுன் மனிஷா கொய்ராலா நடிப்பில் வெளியான முதல்வன் திரைப்படம். இந்த படத்தில் இருக்கும் “அழகான ராட்சசியே அடி நெஞ்சில் குதிக்கிறியே” என்ற பாடலுக்காக மட்டும் இயக்குனர் சங்கர் 2 கோடி ரூபாய் செலவு செய்துள்ளார்.

இரண்டாவதாக கடந்த 2019-ஆம் வெளியான எந்திரன் திரைப்படத்தில் ரஜினி, ஐஸ்வர்யா ராய், சந்தானம் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்தில் இடம் பெற்ற “கிளிமஞ்சரோ மலைக்கனி மஞ்சரோ” பாடலுக்காக சங்கர் 4 கோடி ரூபாய் செலவு செய்துள்ளார்.

மூன்றாவதாக 2015-ஆம் ஆண்டு விக்ரம், எமி ஜாக்சன் நடிப்பில் வெளியான “ஐ” திரைப்படத்தில் இருக்கும் அனைத்து பாடல்களுமே ஹிட்டானது. முக்கியமாக “லேடியோ” பாடலில் எமி ஜாக்சனின் மேக்கப் மற்றும் அவருடைய டிரஸ் அனைவரையும் கவர்ந்தது. இந்தப் பாடலுக்காக இயக்குனர் சங்கர் 5 கோடி ரூபாய் செலவு செய்துள்ளார்.

கடைசியாக கடந்த 2018-ஆம் ஆண்டு வெளியான 2.0 படத்தில் ரஜினி, அக்ஷய் குமார், எமி ஜாக்சன் உள்பட பலர் நடித்துள்ளனர். இந்த படத்தில் இடம்பெற்ற “எந்திரலோகத்து சுந்தரியே” என்ற பாடலுக்காக மட்டும் சங்கர் 32 கோடி வரை செலவு செய்தது குறிப்பிடத்தக்கதாகும்.

