Categories: சினிமா

அவர் மட்டும் இல்லனா இன்னைக்கு தனுஷ், செல்வா இன்னைக்கு கிடையாது.. எனக்கே வயிறு எரிந்தது.. கஸ்தூரிராஜா ஓபன் டாக்..!

Spread the love

இயக்குனர் கஸ்தூரி ராஜாவின் மகனான தனுஷ் துள்ளுவதோ இளமை என்ற திரைப்படம் மூலமாக தான் நடிகராக அறிமுகமானார். அந்தத் திரைப்படத்தில் தான் செல்வராகவனும் இயக்குனராக அறிமுகமானார். அந்தத் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் ஓரளவு வரவேற்பை பெற்றது. அந்த வரவேற்பை பெற முக்கிய காரணமே யுவன் சங்கர் ராஜா தான். அவர் கொடுத்த மிக சிறந்த பாடல்கள் சொல்லுவதோ இளமை திரைப்படத்திற்கு இளைஞர்களை அழைத்து வந்தது. அதன் காரணமாக படம் நஷ்டமும் இல்லாமல் லாபமும் இல்லாமல் தப்பித்தது. துள்ளுவதோ இளமை திரைப்படத்திற்கு பிறகு தனுஷ் உன் செல்வராகவும் இணைந்து காதல் கொண்டேன் திரைப்படத்தை கொடுத்தனர்.

அந்தத் திரைப்படம் சூப்பர் ஹிட் அடித்தது. முக்கியமாக தனுஷ் செல்வராகவும் சினிமாவில் தங்களுக்கான ஒரு இடத்தை பிடித்தனர். அந்த திரைப்படத்திற்கு பிறகு அவர்கள் இருவரின் மார்க்கெட்டும் கொஞ்சம் கொஞ்சமாக சினிமாவில் உயர் ஆரம்பித்திருக்கின்றனர். முக்கியமாக தனுஷை பற்றி சொல்லி தெரிய வேண்டாம். பாலிவுட் மற்றும் ஹாலிவுட் என அவரது உயரம் எங்கேயோ சென்றுவிட்டது. நடிகராக மட்டுமல்லாமல் இயக்குனராக மூன்று திரைப்படங்களையும் இயக்கியுள்ள. அடுத்ததாக தானே நடித்திருக்கும் இட்லி கடை திரைப்படத்தையும் அவர்தான் இயக்குகின்றார். இவருக்கு ஜோடியாக நித்யா மேனன் அந்த திரைப்படத்தில் நடித்து வருவது மட்டுமல்லாமல் அருள் செய்யும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இது ஒரு பக்கம் இருக்க செல்வராகவன் நடிப்பில் படு பிஸியாக இருக்கின்றார்.

மேலும் இயக்கத்தில் மீண்டும் கவனம் செலுத்த ஆரம்பித்திருக்கும் அவர் மெண்டல் மனதில் என்ற படத்தை இயக்கி வருகின்றார். அது மட்டுமல்லாமல் புதுப்பேட்டை 2 மற்றும் ஆயிரத்தில் ஒருவன் 2 ஆகிய படங்களையும் இயக்கும் எண்ணத்தில் உள்ளார். இப்படியான நிலையில் செல்வராகவன் மற்றும் தனுஷின் தந்தையான கஸ்தூரிராஜா சமீபத்தில் ஒரு பட விழாவில் கலந்து கொண்டு பேசிய போது, நான் என்னுடைய மனைவி விஜயலட்சுமி பற்றி பேசிய ஆக வேண்டும். அவர் ஒரு கிராமத்து பெண். அப்போது நான் ஏதோ வேலை செய்து கொண்டிருந்ததால் அவர்கள் வீட்டில் ஏமாந்து எனக்கு பெண்ணை கொடுத்து விட்டார்கள்.

அவர் மட்டும் இல்லை என்றால் இன்று இந்த குடும்பமே இருந்திருக்காது. அதனால்தான் விஜயலட்சுமி கஸ்தூரிராஜா ப்ரொடக்ஷன் என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கினேன். துள்ளுவதோ இளமை திரைப்படத்தை தயாரித்தோம். யுவன் சங்கர் ராஜா மட்டும் இல்லையென்றால் தனுஷும் செல்வராக வேண்டும் என்று கிடையாது. அதுதான் உண்மை. அவ்வளவு அழகாக பாடல்களை கொடுத்தார். தனுஷ் நடிக்கவே வேண்டாம் என்று தான் வீட்டில் சொன்னார்கள். ஆனால் நான் தான் கட்டாயப்படுத்தி நடிக்க வைத்தேன். செல்வராகவனும் மூன்றாவது ஆண்டிலேயே பொறியியல் படிப்பு வேண்டாம் என்று முடிவு செய்துவிட்டார். அப்போது நான் படிப்பை முடித்துவிட்டு வா சினிமாவில் வாய்ப்பு வாங்கி தருகிறேன் என்று சொல்லி அனுப்பி வைத்ததும் செல்வாவும் அடுத்த நாள் காலேஜ் சென்று படிப்பிற்கு கோல்டு மெடல் வாங்கிவிட்டார்.

அதன்பிறகு என்னிடம் வந்து நீங்கள் சொன்னதை நான் செய்து விட்டேன் நான் சொன்னதை நீங்கள் செய்யுங்கள் என்று கூறியதும் எவ்வளவோ முயன்றும் அவருக்கு உதவி இயக்குனர் வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனால் அவரே இயக்குனராக மாறிவிட்டார் என்பது தனிக்கதை. அதனைப் போலவே தனுஷ் பொல்லாதவன் திரைப்படத்தில் கிளைமாக்ஸ் சண்டைக்காட்சியை எடுத்துக் கொண்டிருந்தபோது நான் சென்று இருந்தேன். அப்போது ஷாட் இடைவேளையில் வேகவேகமாக ஓடி வந்து தரையில் படுத்து கொண்டு வொர்க் அவுட் செய்து மீண்டும் அதே வியர்வையோடு ஓடிச் சென்று நடிப்பார். அதை பார்த்து எனக்கு வயிறு எரிந்தது. இவ்வளவு டார்ச்சர் செய்தால் நாம் நடிக்க வைக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. அவ்வளவு கஷ்டப்பட்டதால் தான் இந்த இடத்தை அவரால் தக்க வைக்க முடிந்தது என்று தனுஷின் தந்தை பேசியுள்ளார்.

Nanthini

Recent Posts

மகளிருக்கு ஜாக்பாட்…. உரிமைத் தொகையை உயர்த்தும் CM விஜய்?…. அமைச்சர் ஜெகதீஸ்வரி வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!

மத்திய அரசிடம் இருந்து கூடுதல் நிதி ஆதாரங்களைப் பெற்று, மகளிருக்கான உரிமைத் தொகையை முதல்வர் விஜய் உயர்த்தி வழங்குவார் என…

16 seconds ago

“தவெகவுடன் அதிமுக  கூட்டணி…. இணைந்து 3 வாரம் ஆச்சு”…. புதுக்கோட்டையில் கு.ப.கிருஷ்ணன் போட்ட வெடி…. தமிழக அரசியலில் அடுத்த பரபரப்பு…!

"அதிமுக, தமிழக வெற்றிக் கழகத்துடன் இணைந்து மூன்று வாரங்களுக்கு மேலாகிவிட்டது" என்று அதிமுக முன்னாள் அமைச்சர் கு.ப.கிருஷ்ணன் புதுக்கோட்டையில் செய்தியாளர்களைச்…

5 minutes ago

அட கொடுமையே… எனக்கு அந்தப் பொண்ணு வேணும்… மாமா வீட்டிற்குச் சென்று… பெண் கேட்ட சட்டக் கல்லூரி மாணவர் வெட்டிப் படுகொலை… சிவகங்கையில் அதிர்ச்சி சம்பவம்…!

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே சின்ன புதுக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த சட்டக் கல்லூரி முன்னாள் மாணவரான சிவபாலன் (29), தனது…

45 minutes ago

கடவுளே… இது என்ன அதிசயம்?… 4 கைகள், 4 கால்களுடன் பிறந்த குழந்தை… வியப்பில் மருத்துவர்கள்… இணையத்தை உலுக்கும் வைரல் சம்பவம்…!

மத்திய பிரதேச மாநிலம் சத்தார்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த சிவ்சரண் - ரீட்டா தம்பதிக்கு லவ்குஷ் நகர் அரசு சுகாதார மையத்தில்…

46 minutes ago

அதிர்ச்சி..! ஒரே குடும்பத்தில் 4 பேர் கழுத்து நெரித்துக் கொலை… போதை இளைஞர்களின் கொடூர செயல்… போலீஸ் விசாரணையில் அம்பலமான கொடூரம்…!!

வங்கதேசத்தின் ரங்க்பூர் நகரில் ஓய்வுபெற்ற இந்துப் பள்ளி ஆசிரியர் மற்றும் அவரது குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் கொடூரமாகக் கொலை…

56 minutes ago

16 வயதில் விபரீத முடிவு… பெற்றோரைக் கதறவிட்ட மாணவன்… உடலை வாங்க மறுத்து உறவினர்கள் மறியல்… இளைஞனின் தற்கொலை வழக்கில் அடுத்தடுத்து பரபரப்பு…!!

கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டி அருகே உள்ள ரத்தினபுரத்தைச் சேர்ந்த 11-ம் வகுப்பு மாணவர் கவின் ஜெனில், தனது வீட்டில் தூக்கிட்டுத்…

1 மணத்தியாலம் ago