ஆர் ஜே வாக இருந்த பாலாஜி சினிமாவில் சிறிய சிறிய வேடங்களில் நடித்து வந்தார். நானும் ரௌடி தான் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களிடம் பிரபலமானார். இதனை தொடர்ந்து எல்கேஜி திரைப்படத்தில் ஹீரோவாக அறிமுகமான நிலையில் தன்னுடைய முதல் திரைப்படத்திலேயே ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து விட்டார். இதனை தொடர்ந்து கேரக்டர் நூல்களை விட ஹீரோவாக நடிப்பதில் ஆர்வம் காட்டி வந்தார். அடுத்து சூர்யாவின் 45வது படத்தை ஆர்ஜே பாலாஜி இயக்கி வருகிறார். அந்த படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் ஆர் ஜே பாலாஜி சமீபத்தில் அளித்த பேட்டியில், நான் படிச்ச ஸ்கூல்ல தமிழ் பேசக்கூடாது. அப்படி மீறி பேசினால் ஃபைன் போட்டுருவாங்க. முதல் எக்ஸாம்ல நான் கணக்கு பரிட்சையில் ஃபெயில் ஆயிட்டேன். அதன் பிறகு எல்லோரும் என்னை விட்டு 10 அடி தள்ளி போயிட்டாங்க. எங்க கிளாஸ் ரூம்ல நார்த் இந்தியன்ஸ் மட்டும் அல்லாமல் பல பேரு பட்ட மாணவர்கள் இருந்தார்கள். அதனால் எல்லோரும் எனக்கு பிரண்ட்ஸ் ஆக வேண்டும் என்ற ஆசையில் கஷ்டப்பட்டு படித்து அடுத்து வந்த காலாண்டு பரீட்சையில் நல்ல மார்க் எடுத்துட்டேன்.
அதனால எல்லோரும் என்கிட்ட நல்லா பேச ஆரம்பிச்சுட்டாங்க. நான் படிக்கிற காலத்துல அதிகமாக பசங்க பொண்ணுங்க கிட்ட பேச மாட்டாங்க. ஆனா நான் ஒன்னும் அப்படி கிடையாது எனக்கு மூன்று தங்கச்சி அதனால சின்ன வயசுல இருந்தே கூட படிக்கிறவங்க மற்றும் டீச்சர் என எல்லார்கிட்டயும் ஜாலியா தான் பேசுவேன். பொண்ணுங்க எல்லோரும் படம் பார்க்க கூப்பிட்ட அப்ப எந்த பசங்களும் வரமாட்டான்னு சொன்ன சமயத்துல நான் தான் அவங்க கூட படம் பார்க்க போனேன். எல்லோருக்கும் என்னை ரொம்ப பிடிச்சிருச்சு. அந்த சமயத்துல தான் காலேஜுக்கு போறோம் நாங்களும் லவ் பண்றோம் என்ற எண்ணம் வந்துச்சு.
நான் காலேஜ் படிக்கும் போது என்னுடைய தலைமுடி ஆரஞ்சு கலர்ல இருக்கும், கழுத்துல பெரிய செயின் போட்டுட்டு பேண்ட் எல்லாம் கிழிஞ்ச பேண்ட் போட்டுட்டு பாக்குறதுக்கே பொறுக்கி மாதிரி இருப்பேன். அதனால நான் வந்தாலே தீவிரவாதி வரான் பாரு என்று எல்லோரும் கிண்டல் பண்ணுவாங்க. அது மட்டுமல்லாமல் மேடையில் ஏறி தைரியமா எல்லா நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்வேன். என்னை எந்த பொண்ணுங்களுக்கும் பிடிக்கல. அப்புறம் என்னுடைய மனைவிதான் அப்போ என்னோட கிளாஸ் மெட் ஆ இருந்தாங்க. நான் லவ் பண்ண ட்ரை பண்ண எல்லா விஷயமும் அவங்களுக்கு தெரிஞ்சு பைனல் இயர் படிக்கும்போது நாங்க ரெண்டு பேரும் லவ் பண்ணி அடுத்த ஒரு வருஷத்துல கல்யாணம் பண்ணிக்கிட்டோம் என்று ஆர்ஜே பாலாஜி பேசியுள்ளார்.
மத்திய அரசின் தொகுதி மறுவரையறை (Delimitation) மசோதாவுக்கு எதிராகத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று நேரடியாகக் களமிறங்கி தனது கடுமையான…
திமுக உட்கட்சி அரசியலில் நீண்டகாலமாக நிலவி வரும் புகைச்சல், தற்போது மு.க.அழகிரியின் மகள் கயல்விழியின் காட்டமான விமர்சனங்களால் மீண்டும் விஸ்வரூபம்…
ஆந்திர மாநிலம் சிலகலடோனா பகுதியில் நிகழ்ந்த கோர சாலை விபத்து பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகாவிலிருந்து மந்த்ராலயம் ராகவேந்திரா கோயிலுக்குப்…
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே நள்ளிரவில் நிகழ்ந்த கோர விபத்து, ஒட்டுமொத்த தமிழகத்தையே உலுக்கியுள்ளது. மேட்டுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த நண்பர்களான…
கடந்த 2021-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலின் போது, எடப்பாடி தொகுதியில் போட்டியிட்ட அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது…
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகம் (TVK) சார்பில் போட்டியிடும் வேட்பாளர் செங்கோட்டையன், அளுக்குளி எம்.ஜி.ஆர். நகரில்…