தனுஷ் மேஸ்ட்ரோ இளையராஜாவின் தீவிர ரசிகர் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான். இந்தநிலையில் தற்போது இளையராஜாவின் பயோபிக்கில் தனுஷ் நடிக்க உள்ளார், இந்தப்படத்தின் பூஜை சமீபத்தில் எளிய முறையில் நடந்துள்ளது.
இசைஞானி என்றும் மேஸ்ட்ரோ என்றும் அழைக்கப்படுபவர் இளையராஜா தான். 80களில் தொடங்கி இன்றும் படங்களுக்கு இசையமைத்து வருகிறார். என்னதான் இவரது மகன் யுவன் ஷங்கர் ராஜா வெற்றிகரமான இசையமைப்பாளராக இருந்தாலும், இன்றும் இளையராஜாவை தேடி ஓடும் இயக்குனர்கள் தான் அதிகம். அதற்கு சான்று சமீபத்தில் வெளியான விடுதலை படம்.
விடுதலை படத்தில் இடம்பெற்ற காட்டுமல்லி பாடலை அனைவரும் ரசித்தனர். அப்படி இந்த் ஜெனரேஷனுக்கும் பிடித்த இசையமைப்பாளராக இருக்கிறார் இளையராஜா. ரசிகர்கள் மட்டுமல்ல பல பிரபலங்களும் இளையராஜாவின் ரசிகர்கள் தான். குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் நடிகர் தனுஷ், இளையராஜாவின் தீவிர ரசிகர்.
இளையராஜா பாட்டுக்கள் தான் எனக்கு பிடிக்கும் என பல மேடைகளில் கூறியுள்ளார் தனுஷ், அதேபோல் இளையராஜா இசையில் பல பாடல்களை தனுஷ் பாடியுள்ளார். இந்தநிலையில் இளையராஜாவின் பயோபிக்கில் இளையராஜாவாக நடிக்க உள்ளார் தனுஷ். இந்த செய்தி பல நாட்களாக வந்த நிலையில், தற்போது உறுதியாகி உள்ளது.
Honoured @ilaiyaraaja sir 🙏🙏🙏 pic.twitter.com/UvMnWRuh9X
— Dhanush (@dhanushkraja) March 20, 2024
இன்று படத்தின் பூஜை சிம்பிளாக நடந்துள்ளது. இந்த பூஜையில் இளையராஜா, தனுஷ், கமல், வெற்றிமாறன் என பலரும் கலந்து கொண்டனர். அதுமட்டுமல்ல இந்த படத்தை கேப்டன் மில்லர் இயக்குனர் அருண் மாதேஸ்வரன் தான் இயக்க உள்ளார். இளையாராஜா வாழ்க்கை கதை, அதில் தஹனுஷ் ஹீரோ, அதன் இயக்குனர் அருண் மாதேஸ்வரன் என அடுத்தடுத்த செய்திகள் ரசிகர்களிடம் படம் குறித்த எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி உள்ளது. இந்தப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை தனுஷ் பகிர்ந்துள்ளார்.