நடிகர் தனுஷ் நடித்த கேப்டன் மில்லர் படத்திற்கு அவர் வாங்கிய சம்பளம் குறித்த வெளியான தகவலால் திரையுலகம் அதிர்ச்சியில் உள்ளது. நடிகர் தனுஷ் தமிழில் மட்டுமன்றி பாலிவுட்,கோலிவுட், ஹாலிவுட் என அனைத்திலும் நடித்துவருகிறார். அவர் கடந்த ஆண்டு மித்ரன் ஆர் ஜவஹர் இயக்கத்தில் வெளியான திருட்சிற்றம்பலம் என்ற படத்தில் நடித்திருந்தார். இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்ப்பை பெற்றது.

அதனை அடுத்து அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் , பிரியங்கா மோகன் சிவராஜ்குமார் போன்ற முன்னனி நடிகர்கள் நடித்த படம் கேப்டன் மில்லர். இப்படத்திற்கு ஜி.வி .பிரகாஷ் இசையமைத்துள்ளார்.மிகுந்த எதிர்பார்ப்புக்கு இடையே இப்படம் நேற்று வெளியாகியுள்ளது. இதனை தமிழ் தெலுங்கு, கன்னடம் என பல மொழிகளில் வெளியாகியுள்ளது. இப்படத்தை 1935 களில் நடந்த சுதந்திர போராட்டத்தையும், வன்முறையையும் மையமாக கொண்டு உருவாக்கியுள்ளனர்.

#image_title
பெரும் பொருட்செலவில் உருவான இப்படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்துள்ளது. இப்படத்தில் தனுஷ் ராணுவ வீரராக நடித்துள்ளார்.கன்னட நடிகர் சிவராஜ்குமார் தனுஷின் அண்ணனாகவும், ஆங்கிலேயர்களை எதிர்க்கும் போராளியாகவும் நடித்துள்ளார். மேலும் இப்படத்தில் ரத்தமும்,துப்பாக்கி சத்தமும் தொடர்ந்து கேட்கிறது. இந்த படத்தில் அதிகம் கேட்ட வார்த்தைகளை பயன்படுத்தி இருந்ததால் யூ சான்றிதல் வழங்கப்பட்டு இருந்தநிலையில் அந்த காட்சிகளை நீட்கியதால் தற்போது யூ/எ சான்று வழங்கப்பட்டுள்ளது.

இதனிடையே இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது.இந்நிலையில் தனுஷின் சம்பளம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஆண்டு வெளியான திருட்சிற்றம்பலம் படத்திற்கு அவர் 15 கோடி சம்பளம் வாங்கியதாகவும், கேப்டன் மில்லர் படத்திற்கு 20 கோடி பெற்றுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
