முன்னணி நடிகரான வடிவேலுவை பற்றி சில நாட்களாகவே சமூக வலைத்தளங்களில் பல விமர்சனங்கள் தொடர்ந்து வந்து கொண்டே இருக்கின்றன. இந்நிலையில் அவருடன் இணைந்து பணியாற்றிய பிரபல நடிகர் பெஞ்சமின், வடிவேலுவின் மறுபக்கம் பற்றி கூறினார்.

நடிகர் வடிவேலு, நெருங்கிய நண்பர்களின் இறுதி அஞ்சலியில் கூட கலந்து கொள்ளாதது பல்வேறு விமர்சனத்தை ஏற்படுத்திய நிலையில், குறிப்பாக மறைந்த முன்னணி நடிகரான கேப்டன் விஜயகாந்த்தின் இறுதி அஞ்சலியில் கலந்து கொள்ளாத காரணத்தினால் அவர் மீது பல விமர்சனங்கள் வந்துகொண்டே இருக்கிறது.

இதனை தொடர்ந்து, திரைபிரபலங்களும் நடிகர் வடிவேலுவின் உண்மை முகத்தை பல்வேறு தொலைக்காட்சியில் பேட்டியளிக்கும் போது கூறி வருகின்றனர். இதில் நடிகர் பெஞ்சமினும் வடிவேலுவை பற்றி விமர்ச்சித்துள்ளார். இதில், “வடிவேலு உண்மையில் பிறவி கலைஞன், ஆனால் நல்ல மனிதர் அல்ல” என கூறினார்.

மேலும் அவருடன் இணைந்து பணியாற்றும் போது படப்பிடிப்பு தளத்தில் சில நேரங்களில் சாப்பாடு கிடைக்காமல் நாங்கள் தவித்திருந்த நிலையிலும் அது குறித்து எந்த ஒரு கேள்வியும் கேட்கமாட்டார் . சாப்பாட்டிற்கு கஷ்டப்பட்டு ரோட்டில் நிற்கும் போதும் அது பற்றி எந்த கவலையும் இல்லாமல் கேரவேனில் வடிவேலு ஜம்முனு உட்கார்ந்திருப்பார் என்று குறைசாற்றினார். நடிகர் பெஞ்சமின் அளித்த பேட்டியால் வடிவேலு மீது மேலும் பல விமர்சனம் பரவி வருகிறது.
