பொதுவாக ஒரு கலைஞருக்கு கொடுக்கப்படும் விருதுகள் என்பது, பாலைவனத்தில் ஓடிக் கொண்டிருக்கும் நபருக்கு கொடுக்கப்படும் தண்ணீரைப் போன்றது எனலாம். எட்ட வேண்டிய இலக்கை எட்டிப் பிடிக்க இந்த தண்ணிர் உதவும். முன்னெல்லாம், நடிகர்களுக்கு மட்டும் தான் விருதுகள் வழங்கப்பட்டு வந்தது. பின்னாளில் நீண்ட உழைப்பு, கோரிக்கைகளுக்கு பிறகு தான் பாடகர்களுக்கும் விருதுகள் வழங்கப்பட்டது. குறிப்பாக ஒவ்வொரு வருடமும் சிறப்பாக செயலாற்றிய கலைஞர்களுக்கு தேசிய அளவில் விருதுகள் வழங்கி கௌரவிக்கப்படுகிறது. 69 வருடங்களாக இந்த விருதுகள் பல துறைகளின் கீழ் வழங்கப்படுகிறது. இந்த நிலையில், அதிகமுறை தேசிய விருதுகள் வாங்கிய பாடகர்களை பற்றி தற்போது பார்க்கலாம்.

#image_title
1. யேசுதாஸ் :
1972-ல் யேசுதாஸ் தனது முதல் விருதைப் பெற்றார். ”என் இனிய பொன் நிலாவே”, ”ஆகாயம் மேல்”, ”எந்த நெஞ்சில் நீங்கது” போன்ற பாடல்கள் தமிழில் அவரது சிறந்த பாடல்களில் சில. யேசுதாஸ் கிட்டத்தட்ட 8 முறை சிறந்த பாடகருக்கான விருதை பெற்றுள்ளார்.
2. எஸ்.பி.பாலசுப்பிரமணியம் :
யேசுதாஸைத் தொடர்ந்து அதிக விருதுகளைப் பெற்ற பாடகர்களில் எஸ்பிபியும் ஒருவர். அவர் நான்கு வெவ்வேறு மொழிகளில் ஆயிரக்கணக்கான பாடல்களை பாடியுள்ளார். 1979-ம் ஆண்டு தனது முதல் தேசிய விருதை பெற்ற எஸ்.பி.பி, யேசுதாஸுக்கு பிறகு அதிகப்படியாக 6 முறை தேசிய விருதைப் பெற்றுள்ளார். ”காதல் ரோஜாவே”, “மடை திறந்து”, ”ராக்கம்மா கையத்தட்டு” என அவரது ஹிட் பாடல்களை சொல்லிக் கொண்டே போகலாம்.

#image_title
3. கே.எஸ்.சித்ரா :
எஸ்.பி.பியை தொடர்ந்து 6 முறை தேசிய விருது பெற்ற பாடகர்களில் ஒருவர் சின்னக்குயில் சித்ரா. பெண்கள் பிரிவில் அதிக தேசிய விருதுகளை பெற்றவரும் இவர் தான். 1985-ம் ஆண்டு ‘சிந்து பைரவி’ படத்தில் பாடிய பாடலுக்காக முதல் தேசிய விருதைப் பெற்றார். கண்ணாளனே, ‘ஆனந்த குயிலின் பாட்டு’, ‘வீரபாண்டிய கோட்டையிலே’, ‘நான் போகிறேன்’ போன்றவை இவர் தமிழில் பாடிய பிரபலமான பாடல்களில் சில.

#image_title
4. பி.சுஷீலா :
தெற்கில் இருந்து பலமுறை விருது வாங்கிய பாடகர்களில் ஒருவர் பி.சுஷீலா. 1968-ம் ஆண்டு தனது முதல் தேசிய விருதை வென்றவர், ”கண்கள் எங்கே”, “லவ் பேர்ட்ஸ்”, “சிட்டுக் குருவி என தமிழில் அவரது ஹிட் பாடல்களை அடுக்கிக் கொண்டே போகலாம்.
5. எஸ். ஜானகி :
மெல்லிசை குயின் என அன்போடு அழைக்கப்படுபவர் ஜானகி. 1980 ஆம் ஆண்டு ’16 வயதினிலே’ படத்தில் அவர் பாடியதற்காக முதல் தேசிய விருதைப் பெற்றார். எஸ் ஜானகியின் பிரபலமான பாடல்களில் சில ‘மச்சான பாத்திங்களா’, ‘சுந்தரி கண்ணால் ஒரு சேதி’, ‘சின்னத்தை அவள்’, ‘கண்மணி அன்போடு காதலன்.’ போன்றவை ஆகும். இதுவரை 4 முறை சிறந்த பாடகிக்கான தேசிய விருதை ஜானகி பெற்றுள்ளார்.

#image_title
