“அடுத்த CM ரேஸில் தனுஷ்?”…. கொங்கு மண்டலத்தில் ரகசியமாகத் தொடங்கப்பட்ட மெகா திட்டம்…. தமிழக அரசியலில் அடுத்த டுவிஸ்ட்…!

By Nanthini on ஆவணி 10, 2026

Spread the love

திரையுலகில் முன்னணி நடிகராகவும், பாடகர், இயக்குநர் என பன்முகத்திறமை கொண்ட கலைஞராகவும் முத்திரை பதித்த தனுஷ், அடுத்தகட்டமாக அரசியலில் தடம் பதிப்பதற்கான வேலைகளில் தீவிரம் காட்டி வருகிறார். பாலிவுட் மற்றும் ஹாலிவுட் வரை சென்று சர்வதேச அளவில் கவனம் ஈர்த்துள்ள இவர், சமீபத்தில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவிலேயே தன் அரசியல் வருகைக்கான மறைமுக சமிக்ஞையை வெளிப்படுத்தியிருந்தார். அந்த வகையில், தற்போது தனது ரசிகர் மன்றங்களை ஒருங்கிணைத்து, தேர்தல் அரசியலை நோக்கிய முதற்கட்டப் பணிகளை மும்முரமாகத் தொடங்கியுள்ளார்.

இதன் தொடக்கமாக ‘அனைத்திந்திய தலைமை தனுஷ் நண்பர்கள் நற்பணி மன்றம்’ என்ற பெயரில் தமிழ்நாடு முழுவதும் தொகுதி வாரியாக நற்பணி மன்றங்கள் கட்டமைக்கப்பட்டு வருகின்றன. இயக்குனர் சுப்ரமணியம் சிவா மூலமாக இதற்கான உத்தியோகபூர்வ அறிவிப்புகள் மற்றும் நற்பணி இயக்கங்களின் ஒருங்கிணைப்புப் பணிகள் வெளியிடப்பட்டு வருகின்றன. முதற்கட்டமாக கோவையில் இந்த உறுப்பினர் சேர்க்கை மற்றும் மன்ற விரிவாக்கப் பணிகள் தொடங்கப்பட்டு, மாநிலம் முழுவதற்கும் இதை விரிவுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

   

கோவை மற்றும் கோவை தெற்கு மாவட்டத் தலைமைக்கு உட்பட்ட முக்கியச் சட்டமன்றத் தொகுதிகளில் நற்பணி இயக்கங்கள் அதிகாரப்பூர்வமாகச் செயல்படத் தொடங்கியுள்ளன. அதன்படி கோவை வடக்கு, கவுண்டம்பாளையம், சிங்காநல்லூர், சூலூர் மற்றும் மேட்டுப்பாளையம் ஆகிய ஐந்து சட்டமன்றத் தொகுதிகளுக்கான நற்பணி மன்றப் பட்டியலும், புதிய உறுப்பினர்களை இணைப்பதற்கான மாவட்ட நிர்வாகிகளின் தொடர்பு எண்களும் வெளியிடப்பட்டுள்ளன. கள அளவில் நற்பணிகள் மூலம் மக்களிடம் செல்வாக்கை உயர்த்தவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

   

சினிமாவில் உச்சம் தொட்ட ரஜினி, கமல், விஜய் போன்ற முன்னணி நடிகர்களின் வரிசையில் தற்போது தனுஷும் தன் அரசியல் பயணத்தை நற்பணி மன்றங்கள் வாயிலாகத் தொடங்கியிருப்பது தமிழ் திரையுலகிலும் அரசியலிலும் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. தொகுதி வாரியாக மன்றங்களை வலுப்படுத்தி, மக்கள் நலத்திட்டங்களைச் செயல்படுத்துவதன் மூலம் தனுஷ் தனது அரசியல் அடித்தளத்தை ஆழமாகப் பதிவு செய்ய ஆயத்தமாகி வருகிறார்.