BREAKING: வங்கி கணக்கில் ரூ.1000 வந்தது… சற்றுமுன் தமிழக அரசு அறிவிப்பு…!

By Nanthini on ஆவணி 10, 2026

Spread the love

அரசுப் பள்ளிகளில் 6 முதல் 12-ஆம் வகுப்பு வரை பயின்று உயர்கல்வி சேரும் மாணவர்களின் நலனுக்காகச் செயல்படுத்தப்பட்டு வரும் ‘தமிழ்ப்புதல்வன்’ திட்டத்தின் கீழ், ஆகஸ்ட் மாதத்திற்கான ரூ.1,000 உதவித்தொகை தவணை மாணவர்களின் வங்கிக் கணக்குகளில் நேரடியாக வரவு வைக்கப்பட்டுள்ளது.

நடப்பு நிதியாண்டில் இத்திட்டத்திற்காக அரசு ₹360 கோடி நிதி ஒதுக்கியுள்ள நிலையில், தற்போது வரை 3.28 லட்சம் மாணவர்கள் இதன் மூலம் மாதம்தோறும் பயனடைந்து வருகின்றனர். இச்சூழலில், 2026 – 27 ஆம் கல்வியாண்டில் புதிதாக உயர்கல்வியில் சேர்ந்த மாணவர்களுக்கான விண்ணப்பப் பதிவு விரைவில் தொடங்கப்படவுள்ளது. தகுதியுடைய அரசுப் பள்ளி மாணவர்கள் இத்திட்டத்திற்கு விண்ணப்பித்துத் தங்களின் கல்விச் செலவிற்கான நிதி உதவியைப் பெற்றுப் பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.