ராகிங் கொடுமை…! “10-ஆம் வகுப்பு மாணவனை தட்டு, கம்பால் அடித்து… பூட்ஸ் காலால் மிதித்து சித்திரவதை…” படிக்கட்டிலிருந்து விழுந்ததாக பொய் நாடகம்… பரபரப்பு சம்பவம்…!!

By Devi Ramu on ஆவணி 10, 2026

Spread the love

தெலங்கானா மாநிலம் மேட்சல்-மல்காஜ்கிரி மாவட்டத்தில் உள்ள சக்ஷமா தம்மாய்குடா ஸ்ரீ சைதன்யா மேல்நிலைப் பள்ளி விடுதியில், காமரெட்டியைச் சேர்ந்த அபிஷேக் என்ற 10-ஆம் வகுப்பு மாணவர் படித்து வருகிறார். இரவு நேரத்தில் விடுதியில் நுழைந்த 12 மூத்த மாணவர்கள், ராகிங் என்ற பெயரில் அபிஷேக்கை தடிகளாலும் தட்டுகளாலும் சரமாரியாக தாக்கியதுடன், பூட்ஸ் கால்களால் அவரது முகத்தில் மிதித்துக் கொடூரமாகச் சித்திரவதை செய்துள்ளனர்.

இச்சம்பவத்தில் படுகாயமடைந்த மாணவனின் பெற்றோருக்குத் தகவல் தெரிவித்த பள்ளி நிர்வாகம், மாணவன் படிக்கட்டில் இருந்து கீழே விழுந்து காயமடைந்ததாகப் பொய் கூறி நாடகமாடியுள்ளது. உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வரும் மாணவன், தமக்கு நேர்ந்த ராகிங் கொடுமை குறித்துக் கூறிய பின்னரே உண்மை வெளிச்சத்திற்கு வந்தது. தன் மகனைத் தாக்கிய மாணவர்கள் மற்றும் சம்பவத்தை மூடி மறைக்க முயன்ற பள்ளி நிர்வாகத்தின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கக்கோரி பெற்றோர் காவல்துறையில் புகார் அளித்துள்ளனர்.