Categories: சினிமா

‘ஏன்டா ஐயா சிகரெட் பிடிக்கும்போது டிஸ்டர்ப் பண்ற?’… தனுஷ் பற்றி ராஜ்கிரண் சிலாகித்த சம்பவம்!

Spread the love

1991 ஆம் ஆண்டு வெளியாகி கவனம் வெள்ளி விழா கண்ட படம்தான் தனுஷின் தந்தை கஸ்தூரி ராஜா இயக்கிய ‘என் ராசாவின் மனசிலே’. உதவி இயக்குனராக இருந்த போது 12 ஆண்டுகளுக்கு முன்னர் தான்  எழுதிய ஒரு கதையை அவர் அப்போது தயாரிப்பாளராகவும் விநியோகஸ்தராகவும் இருந்த ராஜ்கிரணிடம் கூறியுள்ளார். அந்த கதை ராஜ்கிரணுக்கு பிடித்துவிடவும், அதில் இருந்த மாயாண்டி என்ற முரடனின் கதாபாத்திரம் தனக்கு பொருத்தமாக இருக்கும் என முடிவு செய்து தானே நடிக்கவும் முடிவு செய்துள்ளார்.

இந்த படத்தில் முதலில் ராமராஜனைதான் நடிக்க வைக்க வேண்டும் என முடிவு செய்துள்ளனர். ஆனால் அவர் நெகட்டிவ் தன்மையுள்ள கதாபாத்திரம் என்பதால் யோசித்துள்ளார். அதனால் ஒரு கட்டத்தில் ராஜ்கிரண் நானே இந்த படத்தில் நடிக்கிறேன் என்று சொல்லி இறங்கியுள்ளார். படம் வெளியாகி அவரை முன்னணி கதாநாயகன் ஆக்கியது. ஒரு கட்டத்தில் ரஜினி, கமலுக்கு இணையான சம்பளத்தை அவர் பெற்றார்.

ஆனால் ஒரு குறிப்பிட்ட ஆண்டுகளுக்குள்ளாகவே ஹீரோவாக அவரின் மார்க்கெட் விழுந்தது. அதன் பின்னர் குணச்சித்திர நடிகராக நந்தா திரைப்படத்தில் ரி எண்ட்ரி கொடுத்தார். அந்த படத்தில் அவரின் நடிப்பு பாராட்டுகளைப் பெற தொடர்ந்து இப்போது வரை குணச்சித்திர நடிகராக நடித்து வருகிறார்.

தன்னுடைய அப்பாவை அறிமுகப்படுத்தியவர் என்பதால் தனுஷுக்கு, ராஜ்கிரண் மேல் அளவற்ற அன்பு உண்டு. அதனால்தான் தான் இயக்கிய முதல் படமான ‘பவர் பாண்டி’யில் ராஜ்கிரணைக் கதாநாயகனாக நடிக்கவைத்தார். இப்போது தான் இயக்கும் ‘இட்லி கடை’ படத்திலும் முக்கியமான வேடத்தில் நடிக்கவைத்துள்ளார்.

இந்நிலையில் தனுஷ் தன் மேல் வைத்திருக்கும் அளவற்ற அன்பைப் பற்றி ராஜ்கிரண் ஒரு நேர்காணலில் பகிர்ந்துள்ளார். அதில் “பவர் பாண்டி ஷூட்டிங்கின் போது நேரம் கிடைத்தால் நான் தம் அடிக்க வெளியே செல்வேன். அப்போது ஷாட் ரெடி என்று ஒரு உதவி இயக்குனர் வந்து என்னைக் கூப்பிட்டார். அதைப் பார்த்த தனுஷ் “ஏன்டா சார் தம் அடிக்கும் போது அவர டிஸ்டர்ப் பண்ற?’ என்று கேட்டு அவரைக் கடுமையாக திட்டிவிட்டார். அதேபோல ஒருமுறை ஷூட்டிங் ஸ்பாட்டில் ‘யாரோ என்னை உரசி சென்றுவிட்டார்’ அவரையும் அழைத்துத் திட்டிவிட்டார்” எனத் தெரிவித்துள்ளார்.

vinoth

Recent Posts

விக்ரம் கோட் வேர்ட் கவனிச்சீங்களா?… 2026 தேர்தலில் திரையுலகம் கொடுத்த ஷாக் – யாருக்கு சாதகம்?… கதிகலங்கும் மற்ற கட்சிகள்…!

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026, ஏப்ரல் 23-ஆம் தேதியான இன்று மாநிலம் முழுவதும் மிகுந்த எழுச்சியுடன் நடைபெற்று வருகிறது. காலை…

9 seconds ago

தமிழக அரசியலில் அடுத்த வாரிசு?… முதல்முறை வாக்களித்த பின் இன்பநிதி சொன்ன அந்த ஒரு வார்த்தை..!

தமிழக சட்டமன்றத் தேர்தல் இன்று விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது குடும்பத்தினருடன் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள…

6 minutes ago

இந்தியாவிற்கு வந்த மிகப்பெரிய ஆபத்து… விஜய்யின் பக்கத்து வீட்டுக்காரர் கொடுத்த ‘பவர்ஃபுல்’ வார்னிங்… அடுத்த 48 மணிநேரத்தில்…!

சென்னையைச் சேர்ந்த பிரபல ஆப்ஷன் டிரேடர் பி.ஆர்.சுந்தர், இந்திய பங்குச்சந்தையின் தற்போதைய நிலை குறித்து மிக முக்கியமான எச்சரிக்கை ஒன்றை…

10 minutes ago

பகீர்..! ஒரே நாளில் 18 பற்களுக்குச் சிகிச்சை… கொஞ்ச நேரத்தில் 4 வயது சிறுமிக்கு நேர்ந்த பரிதாபம்… பல் மருத்துவரால் பறிபோன உயிர்..!!

கஜகஸ்தானில் 4 வயது சிறுமி ஒருவருக்கு பல் சிகிச்சை அளிக்க முயன்றபோது நேர்ந்த சோகமான சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.…

21 minutes ago

கணவன் மனைவியா வாழ்த்தோமே.. 2 முறை அபார்ஷன் வேற… காதலனைத் தேடி கிராமத்திற்கே வந்த டெல்லி காதலி… அடுத்து நடந்த டுவிஸ்ட்..!!

டெல்லியில் ஒன்றாக வேலை செய்தபோது காதலித்துவிட்டு, தற்போது வேறு பெண்ணைத் திருமணம் செய்ய முயன்ற காதலனைத் தேடி, இளம்பெண் ஒருவர்…

30 minutes ago

என் கணவர் வீட்டில் இல்லாத நேரத்தில்… நரகத்தை நேரில் பார்த்த பெண்.. டெல்லி கொலைக்கு முன் நடந்த அதிர்ச்சி சம்பவம்… நெஞ்சை உலுக்கும் வாக்குமூலம்..!!

டெல்லியில் ஓய்வுபெற்ற ஐ.ஆர்.எஸ் (IRS) அதிகாரியின் மகளைக் கொலை செய்த அதே கும்பல், ராஜஸ்தானின் ஆழ்வார் பகுதியில் ஒரு பெண்ணுக்கு…

46 minutes ago