டெல்லியில் இருந்து சென்னை திரும்பிய தனுஷ்…. 3000 பெண்களுடன் அவசர ஆலோசனை…. தமிழக அரசியலில் மாபெரும் திருப்பம்… கதி கலங்கும் அரசியல் கட்சிகள்….!

By Nanthini on ஐப்பசி 25, 2026

Spread the love

நடிகர் தனுஷ் டெல்லி பயணத்தை முடித்துக் கொண்டு சென்னை திரும்பியுள்ள நிலையில், சென்னை ஓஎம்ஆரில் உள்ள ஜேப்பியார் கல்லூரியில் தனது அகில இந்திய தனுஷ் நற்பணி இயக்கத்தின் மகளிரணி நிர்வாகிகளையும், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வருகை தந்துள்ள 3000-க்கும் மேற்பட்ட பெண் ரசிகைகளையும் இன்று நேரில் சந்திக்கிறார். டெல்லி முகாமுக்குப் பிறகு தனுஷ் பங்கேற்கும் முதல் பொது நிகழ்ச்சி இது என்பதால், திரையுலகிலும் அரசியல் வட்டாரத்திலும் இந்நிகழ்வு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்தில் திருவள்ளூரில் நடைபெற்ற பிரம்மாண்ட ரத்ததான முகாம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவிலேயே, தனது ரசிகர் மன்றக் கட்டமைப்புகளை மேலும் வலுப்படுத்தி நற்பணிகளை விரிவுபடுத்த தனுஷ் உத்தரவிட்டிருந்தார். அதனைத் தொடர்ந்து, ரசிகர் மன்றத்தில் புதிய உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டு, விரைவில் இயக்கம் முழுமையான நற்பணி இயக்கமாக மாற்றப்பட உள்ளது. எந்தவொரு அமைப்பும் மக்களிடம் ஆழமாகச் சென்று சேர பெண்களின் பங்களிப்பு மிக அவசியம் என்பதை உணர்ந்து, அனைத்து மாவட்டங்களிலும் புதிய பெண் உறுப்பினர்களை அதிகளவில் சேர்க்க அவர் அறிவுறுத்தியிருந்தார்.

   

தமிழகத்தில் அடுத்தடுத்து நடிகர்கள் அரசியல் களம் கண்டு வரும் சூழலில், தனுஷின் இந்த திடீர் நற்பணி மன்ற விரிவாக்கமும் மகளிர் சந்திப்பும் அவர் அரசியலுக்கு வரப்போகிறாரா அல்லது வேறு ஏதேனும் கட்சிக்கு ஆதரவளிக்கப்போகிறாரா என்ற விவாதத்தை தீவிரப்படுத்தியுள்ளது. இது குறித்து அமைச்சர்கள் மற்றும் பிரபலங்கள் கருத்து தெரிவித்து வரும் நிலையில், “யார் வேண்டுமானாலும் கட்சி தொடங்கலாம், ஆனால் மக்கள் ஏற்றுக்கொள்ளும் உண்மைத்தன்மையும் மக்கள் நலனில் அக்கறையும் மட்டுமே அவர்களை அரசியலில் நிலைநிறுத்தும்” என இயக்குநர் பேரரசு கருத்து தெரிவித்துள்ளார்.

   

அரசியல் பிரவேசம் குறித்த பல்வேறு கேள்விகளும் ஊகங்களும் ஒருபுறம் எழுந்தாலும், தனுஷ் தரப்பில் இருந்து நற்பணிகளை ஒருங்கிணைப்பது மட்டுமே இதன் நோக்கம் என்று தெரிவிக்கப்படுகிறது. இன்று நடைபெறும் இந்த மகளிர் அணி சந்திப்பில் பங்கேற்கும் நிர்வாகிகளுடன் தனுஷ் தனித்தனியாகப் புகைப்படம் எடுத்துக்கொள்ளவுள்ளார். தனுஷின் இந்த நகர்வு வெறும் ரசிகர் மன்ற மறுசீரமைப்பா அல்லது அவரது எதிர்கால அரசியல் பயணத்திற்கான முதற்கட்டப் புள்ளியா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.