அதிர்ச்சி… வைரல் பூஜை வீடியோவில் சிக்கிய தொழிலதிபர்… சஞ்சீவ் கோயங்காவின் ஊழியர்… இணையத்தில் தீயாய் பரவும் விவகாரம்…!

By Swetha on ஐப்பசி 25, 2026

Spread the love

துர்கா பூஜை பண்டிகையின்போது கொல்கத்தாவில் எடுக்கப்பட்ட ஒரு அழகான குடும்ப வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது பெருமளவில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், ஒரு பெங்காலி குடும்பம் கை ரிக்சாவில் மகிழ்ச்சியுடன் உலா வருவதும், சிரித்துப் பேசிப் பாட்டுப் பாடுவதும் மிகவும் இயல்பாகப் பதிவாகியுள்ளது. இந்த எளிய மற்றும் மனதுக்கு நெருக்கமான தருணம் இணையவாசிகளின் இதயங்களை ஈர்த்து பாராட்டுக்களைப் பெற்று வருகிறது.

பிரபல தொழிலதிபரும், ஆர்பி-சஞ்சீவ் கோயங்கா குழுமத்தின் தலைவருமான சஞ்சீவ் கோயங்கா அந்த வீடியோவை தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மேலும், அந்த வீடியோவில் ரிக்சாவில் இருக்கும் நபர் தங்களது நிறுவனமான ‘CESC Limited’-ஐச் சேர்ந்த அபிஷேக் முகர்ஜி என்றும், அவரும் அவரது குடும்பத்தினரும் பூஜையின் மகிழ்ச்சியை எந்தவித செயற்கைத் தன்மையும் இல்லாமல் மிகவும் இயல்பாக வெளிப்படுத்தியுள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

   

https://twitter.com/i/status/2113368817892254176

   

இந்த எளிய குடும்பச் சுற்றுப்பயணத்தின் வீடியோ இணையத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளதுடன், பெருநகரங்களின் ஆடம்பரமான கொண்டாட்டங்களை விட அன்பானவர்களுடன் கழிக்கும் சிறு தருணங்களே உண்மையான மகிழ்ச்சியைத் தரும் என்பதை நெட்டிசன்கள் பலரும் சிலாகித்து பேசி வருகின்றனர்.