கமல் – H.வினோத் படம் கைவிடப்பட்டதா..? அதற்கு காரணம் தனுஷா..? இது என்ன புது ட்விஸ்ட்..

By Priya Ram

Updated on:

முன்னணி இயக்குனரான எச்.வினோத் சதுரங்க வேட்டை திரைப்படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார். அவர் அடுத்தடுத்து தரமான கதைக்களத்தை கொண்ட படங்களை இயக்கினார். இந்நிலையில் வினோத் இயக்கத்தில் நடிகர் கமலஹாசன் நடிக்க உள்ளதாக பல மாதங்களுக்கு முன்பே அறிவிப்பு வெளியானது.

   

கமல் 233 படத்தை ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியானது. ஆனால் அந்த படத்தின் படப்பிடிப்பு துவங்கப்படாமலேயே இருந்தது. இதனால் ‘கமல் 233’ படம் கைவிடப்பட்டதா என்ற சந்தேகமும் எழுந்தது.

Kamal Haasan

இதற்கிடையே கமல்ஹாசன் இந்தியன் 2 என அடுத்தடுத்த படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். அந்த படத்தை முடித்த கையோடு எச். வினோத் இயக்கத்தில் கமல் நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அடுத்ததாக கமல்ஹாசன் மணிரத்தினம் இயக்கத்தில் தக் லைப் படத்தில் நடிக்க வேண்டியதாயிற்று.

இதனால் எச்.வினோத் இயக்கத்தில் உருவான படம் தள்ளிக்கொண்டே போனது. இதனால் எச்.வினோத் புதிய முடிவை எடுத்துள்ளார். அது என்னவென்றால் வினோத் இயக்கத்தில் தனுஷ் நடிப்பதாக ஏற்கனவே பல்வேறு தகவல்கள் இணையத்தில் உலா வந்தது.

அந்த வகையில் கமல் படத்தை ஒத்திவைத்து தனுஷ் நடிக்கும் படத்தை இயக்க வினோத் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. வேறு ஒரு படத்தின் ஷூட்டிங் முடிந்தவுடன் வினோத் இயக்கத்தில் தனுஷ் நடிக்க ஆரம்பிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே தீரன் அதிகாரம் ஒன்று 2 படத்தையும் வினோத் இயக்கவிருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.

author avatar
Priya Ram