அடிச்சுது ஜாக்பாட்.. தளபதி விஜய்யின் GOAT படத்தில் இணைந்த ‘எதிர்நீச்சல்’ சீரியல் நடிகை.. அவரே வெளியிட்ட புகைப்படம்..!!

By Priya Ram

Published on:

வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிப்பில் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்(Greatest Of All Time) படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கிறது. இந்த படத்தில் விஜய் வித்தியாசமான கெட்டப்பில் நடிக்கிறாராம். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக மீனாட்சி சவுத்ரி நடிக்கிறார். மேலும் ஜெயராம், பிரபுதேவா, மோகன், பிரசாந்த் உள்ளிட்ட ஏராளமான நட்சத்திரங்கள் கோட் படத்தில் நடிக்கின்றனர்.

   

இதற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஷூட்டிங் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் எதிர்நீச்சல் சீரியலில் ஈஸ்வரி கதாபாத்திரத்தில் நடிக்கும் கனிகா இயக்குனர் வெங்கட் பிரபுவுடன் எடுத்து கொண்ட புகைப்படத்தை சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டு கோட் திரைப்படத்தில் இணைந்துள்ளதாக கூறியுள்ளார்.

சன் டிவியில் எதிர்நீச்சல் சீரியலை பார்ப்பதற்கு என ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். அந்த சீரியலில் ஈஸ்வரி கதாபாத்திரத்தில் நடிப்பவர் நடிகை கனிகா. இவர் மாதவன், அஜித் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களோடு இணைந்து நடித்துள்ளார். சில படங்களுக்கு கனிகா டப்பிங் ஆர்டிஸ்ட் ஆகவும் வேலை பார்த்துள்ளார்.

மக்களின் மனதை கவர்ந்த எதிர்நீச்சல் சீரியலில் நடிகை கனகா தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார். தற்போது வெங்கட் பிரபுவுடன் கனிகா பதிவிட்ட புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் கோட் படத்தில் கனிகா நடித்திருக்கிறாரா? அல்லது டப்பிங் பேசியிருக்கிறாரா? என கேள்வி எழுப்பி வருகின்றனர். ஆனால் இது குறித்து கூடுதல் விவரங்கள் எதுவும் வெளியாகவில்லை. பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by Kaniha (@kaniha_official)

author avatar
Priya Ram