வெறித்தனமாக உருவாகும் இரண்டாம் பாகம்..18 வருடங்களுக்குப் பிறகு சம்பவம் செய்ய காத்திருக்கும் தனுஷின் ஆஸ்தான இயக்குனர்..

By Ranjith Kumar

Updated on:

நீண்ட நாட்கள் பிறகு தனுஷ் செல்வராகவன் ரசிகர்களுக்கு சரியான விருந்தாக அமைய உள்ள படம்தான் புதுப்பேட்டை 2, செல்வராக வனின் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் லட்சுமி தயாரிப்பில் வெளியான புதுப்பேட்டை ஒன்னு படம் ரிலீஸ் ஆன சமயத்தில் பெருமளவில் பேசப்படாமல் அப்படம் சரியாக ஓடாமல் 10 வருடம் கழித்து அப்படத்தை ரசிகர்கள் தூக்கி கொண்டாடி மகிழ்ந்தார்கள்.

   

அந்த சமயத்தில் புதுப்பேட்டை வெளியான பொழுது மக்களுக்கு அதை புரிந்து கொள்ளும் அளவிற்கு பக்குவம் பத்தவில்லை என்று கூறலாம், ஆனால் ரிலீஸ் வெளியான சில வருடங்களுக்குப் பிறகு படத்தை அனைத்து தரப்பு ரசிகர்களும் தூக்கி கொண்டாடினார்கள். தனுஷ் ஆனாலும் சரி, செல்வராகவன் ஆனால் சரி யார் எந்த நிகழ்ச்சிக்கு வந்தாலும் புதுப்பேட்டை டு எப்போ எப்போ என்று ரசிகர்கள் கேட்ட வண்ணமயமாகவே தான் இருப்பார்கள், செல்வராகணும் சரி தனுஷம் அவர்கள் சரி கூடிய சீக்கிரத்தில் நாங்கள் இணைந்து படத்தை தொடங்குவோம் என்று வாக்கு கொடுத்து தான் இருந்தார்கள். ஆனால் தற்போது,

வரும் ஏப்ரல் மாதத்தில் செல்வராகவன்னும் தனுஷும் இணைந்து புதுப்பேட்டை 2 படத்தை ஆரம்பிக்க உள்ளதாக தகவல் வெளியாகிறது பார்ட் 1 படத்தை வெளியிட்ட லட்சுமி அவர்கள் என்.ஒ.சி யை கலைப்புலி தான் அவர்களுக்கு வழங்கி, பார்ட் 2 படத்தை கலைப்புலி தான் தயாரிக்கிறாராம், அப்படத்தை தயாரித்து வெளியிடுவதும் அவர்தானா. நீண்ட நாள் பின்பு தனுஷ் மற்றும் செல்வராகவனின் ரசிகர்களுக்கு பெரும் விருந்தாக இப்படம் அமையும் என்று மக்கள் பெரும் அளவில் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

maxresdefault 7
author avatar
Ranjith Kumar