தமிழ் திரையுலகில் ‘என்னவளே’ திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை சினேகா. குறிகிய காலத்திலேயே தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்து முன்னணி நடிகையாக உயர்ந்தார். சினிமாவில் பிசியாக நடித்துக் கொண்டிருக்கும் பொழுதே நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவரும் இணைந்து ‘அச்சம் உண்டு அச்சம் உண்டு’ திரைப்படத்தில் இணைந்து நடித்தனர்.
அப்பொழுது இருவருக்கும் இடையில் காதல் மலர்ந்தது. இதைத்தொடர்ந்து இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர். இன்று திரையுலகம் கொண்டாடும் நட்சத்திர தம்பதிகளாக வலம் வந்து கொண்டுள்ளனர். இவர்களுக்கு ஆத்யந்தா, விஹான் என்று இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
திருமணத்திற்கு பிறகு திரை வாழ்க்கை விட்டு சற்று விலகி இருந்த நடிகை சினேகா தனுஷ் நடிப்பில் வெளிவந்த ‘பட்டாசு’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஒரு சூப்பர் ரீ என்ட்ரி கொடுத்தார். இதை தொடர்ந்து தற்பொழுது வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்துவரும் கோட் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
சினிமா மட்டுமின்றி சினேகா சொந்தமாக பல பிஸினஸ்களையும் செய்து வருகிறார். அதில் ஒன்று தான் தற்பொழுது புதிதாக தொடங்கப்பட்ட ‘சினேகாலயா சில்க்ஸ்’ என்கிற துணிக்கடை. இக்கடையின் திறப்பு விழா வருகிற பிப்ரவரி 12ம் தேதி நடைபெற உள்ளதாகவும், அதற்கான அழைப்பிதழ்களை பிரபலங்களுக்கு நடிகை சினேகா அனுப்பி வைப்பதாகவும் கூறப்படுகிறது. இதோ அந்த அழைப்பிதழ்…