Categories: சினிமா

இந்திய திரைப்பட வரலாற்றில் இடம் பெற்ற தேவாரா… 10 நாளில் இத்தனை கோடி வசூலா..?

Spread the love

இயக்குனர் ராஜமவுலி இயக்கத்தில் RRR திரைப்படம் ரிலீஸ் ஆனது. இந்த திரைப்படத்தில் ராம்சரனுடன் இணைந்து ஜூனியர் என்டிஆர் நடித்திருந்தார். அந்த படம் சூப்பர் ஹிட் ஆனது. அது மல்டி ஸ்டார் படமாகவே பார்க்கப்பட்டது. கடந்த 2018-ஆம் ஆண்டு அரவிந்த சமேத வீரராகவர் திரைப்படம் ஜூனியர் என்டிஆர் நடிப்பில் ரிலீசானது.

பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஆறு வருடங்களுக்கு பிறகு இப்போது ஜூனியர் என்டிஆர் நடிப்பில் உருவான தேவாரா திரைப்படம் திரையரங்குகளில் பிரம்மாண்டமாக ரிலீஸ் ஆகி உள்ளது. கொராட்டாலா சிவா மற்றும் ஜூனியர் என்டிஆர் கூட்டணியில் உருவாகி இரண்டாவது திரைப்படம் இது. முன்னதாக சிவா இயக்கத்தில் ஜூனியர் என்டிஆர் நடித்த ஜனதா கேரேஜ் என்ற படம் சூப்பர் ஹிட் ஆனது.

தேவாரா திரைப்படத்தில் ஜூனியர் என்டிஆர் ஜோடியாக பிரபல நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் நடித்துள்ளார். இந்த திரைப்படத்தில் சைப் அலிகான் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் பிரகாஷ்ராஜ் நந்தமுரி கல்யாண் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த திரைப்படத்தை யுவசுதா ஆர்ட்ஸ் மற்றும் என்டிஆர் ஆர்ட்ஸ் இணைந்து தயாரிக்கிறது. இந்த திரைப்படத்தில் அனிருத் இசையமைப்பாளராக வேலை பார்த்து உள்ளார்.

கடந்த 1980-1990க்கு இடைப்பட்ட காலத்தில் நடந்த நிகழ்வுகளை மையமாக வைத்து படம் எடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் ரிலீசான 10 நாட்களில் தேவாரா திரைப்படம் உலகம் முழுவதும் 363.15 கோடி ரூபாய் வசூலித்து சாதனை படைத்துள்ளது. மேலும் 2024-ஆம் ஆண்டில் அதிக வசூல் செய்த நான்காவது இந்திய திரைப்படம் என்ற சாதனையை படைத்துள்ளது.

admin

Recent Posts

காப்பாத்துங்க…! கொழுந்துவிட்டு எரிந்த தீ… நெருப்பு வளையத்தில் சிக்கிய ஐடி அதிகாரிகள்… சினிமா பாணியில் அரங்கேறிய மாஸ் மீட்பு…!!

மும்பை சர்ச்கேட் பகுதியில் செயல்பட்டு வரும் வருமான வரித்துறை அலுவலகமான 'ஆய்கர் பவன்' கட்டிடத்தில் திங்கள்கிழமை மதியம் சுமார் 2…

6 மணத்தியாலங்கள் ago

“ஆட்டோ டயரில் நாய் சிறுநீர் கழித்ததால் வந்த வினை…” 23 வயது இளைஞர் கத்தியால் குத்தி கொலை…! சினிமாவை மிஞ்சிய பயங்கர சம்பவம்…!!

தெலுங்கானா மாநிலம் கம்மம் நகரைச் சேர்ந்த ஸ்ரீநாத் (23) என்ற இளைஞர், கடந்த 13-ஆம் தேதி இரவு தனது நண்பரின்…

6 மணத்தியாலங்கள் ago

“அப்பாவை விட்டுடுடா”கதறிய குடும்பம்… போதையில் வெறிச்செயல் செய்த பெற்ற மகன்… நடுரோட்டில் நடந்த நெஞ்சை உலுக்கும் பகீர் சம்பவம்…!!

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள மண்ணூர் பகுதியில், சொத்து தகராறில் பெற்ற மகனே லாரி ஏற்றி தந்தையைக் கொன்ற…

6 மணத்தியாலங்கள் ago

ஈரான் அளித்த அதிரடி ஆஃபர்… அமெரிக்க வீரர்கள் சிக்குனா விடாதீங்க… ஈரானியர்களுக்கு கொட்டும் பரிசு மழை… ட்ரம்ப் எடுக்க போகும் முடிவு என்ன?…

அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், அமெரிக்க வீரர்களைப் பிடிப்பதற்கோ அல்லது கொல்வதற்கோ $30,000 வரை வெகுமதி வழங்கப்படும்…

6 மணத்தியாலங்கள் ago

சினிமா பாட்டு தகராறா?.. இல்லை பழிக்குப் பழியா?.. ரத்த வெள்ளத்தில் கோவில் வளாகம்… இரட்டைக் கொலையில் வெடிக்கும் புது ட்விஸ்ட்…!!

காஞ்சிபுரம் மாவட்டம் படுநெல்லி கிராமத்தில் உள்ள பொன்னியம்மன் கோவில் ஆடித் திருவிழாவின் போது எதிர்பாராத விதமாக கொடூரமான இரட்டைக்கொலை சம்பவம்…

6 மணத்தியாலங்கள் ago

தாயுடன் நெருக்கம்… மகனுக்கு மிரட்டல்… செல்போனை நோண்டிய போலீசுக்கு காத்திருந்த அடுத்த அதிர்ச்சி… இறுதியில் நீதிமன்றம் கொடுத்த மரண அடி…!!

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியைச் சேர்ந்த அசோக் குமார், காரைக்காலில் பணிபுரிந்தபோது அங்குள்ள திருமணமான பெண் ஒருவருடன் தகாத உறவு ஏற்படுத்திக்…

6 மணத்தியாலங்கள் ago