Categories: சினிமா

என்னது டைட்டானிக் படத்துல BGM நல்லா இல்லையா… இசையமைப்பாளர் தேவாவுக்கு ஷாக் கொடுத்த உதவி இயக்குனர்!

Spread the love

தமிழ் சினிமாவில் 90 களில் இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மான் இசை ராஜ்ஜியம் நடத்திக் கொண்டிருந்த போது தனி வழியில் சென்றவர்தான் தேனிசைத் தென்றல் தேவா. விஜய், அஜித், சூர்யா, ரஜினி, கமல் என பல முன்னணி நடிகர்களொடும், பாலச்சந்தர், பாரதிராஜா, வசந்த் என முன்னணி இயக்குனர்களோடும் பணியாற்றி பல ஹிட் பாடல்களைக் கொடுத்துள்ளார்.

சமீபகாலமாக படங்களுக்கு இசையமைக்காமல் இருந்த தேவா இப்போது மீண்டும் அறம் கோபி இயக்கும் ஒரு படத்துக்கு இசையமைக்க கமிட்டாகியுள்ளார். தேவாவின் சினிமா வாழ்க்கையில் அவர் ரஜினிக்காக இசையமைத்த அண்ணாமலை மற்றும் பாட்ஷா ஆகிய இரு படங்களும் மைல்கல்லாக அமைந்தன. அதுவரை ரஜினி – இளையராஜா காம்பினேஷன் வெற்றிக்கொடி நாட்டி வந்த நிலையில் தேவா ரஜினி படங்களுக்கு தன்  இசையால் புத்துயிர் ஊட்டினார்.

தேவா தன்னுடைய பாடல்களை சூப்பர் ஹிட்டாக கொடுத்தது போல தனது நேர்காணல்களிலும் அட்டகாசமாகப் பேசி ரசிகர்களைக் கவரும் திறன் கொண்டவர். அப்படி அவர் சமீபத்தில் டைட்டானிக் படத்தைத் தான் பார்த்த அனுபவத்தை சுவைபட பேசியுள்ளார்.

அதில் “அப்போது டைட்டானிக் படம் ரிலிஸாகி பரபரப்பாக ஓடிக்கொண்டிருந்தது. அப்போது யாரைப் பார்த்தாலும் அந்த படத்தைப் பார்த்துவிட்டீர்களா எனக் கேட்பார்கள். நான் எனக்கு நேரமில்லை சீக்கிரம் பார்க்கிறேன் என சொல்லி வந்தேன். அப்போது ஒரு உதவி இயக்குனர் என்னிட, வந்து அந்த படம் சரியில்லை என்று சொன்னார்.

நான் அதிர்ச்சியாகி என்னப்பா சொல்ற எனக் கேட்க, “ஆமாண்ண, ஒரு கப்பல் போய் பனிப்பாறையில மோதி எல்லோரும் சாகிறார்கள். சரியான பில்டப்பே இல்லை. ரி ரெக்கார்டிங்கும் சரியில்ல என்றார். நான் போய் அந்த படத்தப் போய் பார்த்தேன். படம் அட்டகாசமாக இருந்தது. அருமையான பின்னணி இசை. இதைப் போய் அவர் பிடிக்கவில்லை என்று சொன்னாரே என ஷாக் ஆகிவிட்டேன். ” என ஜாலியாகப் பகிர்ந்துள்ளார்.

vinoth

Recent Posts

விடைபெறுகிறேன்..! “இது எனது வாழ்நாள் பாக்கியம்” ஆப்பிள் நிறுவனத்திலிருந்து விடைபெறும் டிம் குக்.. உருக்கமான பிரியாவிடை கடிதம்..!!

ஆப்பிள் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி (CEO) பதவியிலிருந்து டிம் குக் வரும் செப்டம்பர் மாதம் விலக உள்ளதாக அந்த…

3 minutes ago

தப்பிப்பதே கடினம்… 2026 வரை விடாது துரத்தும் கேதுவின் பிடி… இந்த 4 ராசிகளுக்கும் வரப்போகும் சோதனை காலம்…!

கேது பகவான் தனது சொந்த நட்சத்திரமான மகம் நட்சத்திரத்திற்குள் ஏப்ரல் 20-ம் தேதி பிரவேசித்துள்ள நிலையில், டிசம்பர் 5, 2026…

5 minutes ago

BREAKING: மீண்டும் தொடங்கும் போர்… ஈரானை அதிர வைத்த டிரம்பின் ‘பகீர்’ வார்னிங்… உலகையே உலுக்கும் போர்ப்பதற்றம்…!

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே நிலவி வந்த இரண்டு வார கால போர் நிறுத்தம் நாளை மாலையுடன் முடிவுக்கு வரவுள்ள…

9 minutes ago

“யார் சொன்னது மும்பை அவுட்?”… ஒரே ஒரு சதம்.. தலைகீழாக மாறிய ஐபிஎல் புள்ளிப் பட்டியல்… சிஎஸ்கே ரசிகர்களுக்கு ஷாக் நியூஸ்…..!

தொடர் தோல்விகளால் துவண்டு போயிருந்த மும்பை இந்தியன்ஸ் அணி, குஜராத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 99 ரன்கள் வித்தியாசத்தில் அபார…

12 minutes ago

“என் கல்லூரி மேல குண்டு போடுங்க” இஸ்ரேல் பிரதமருக்கு மெசேஜ் அனுப்பிய மாணவி… பகீர் பின்னணி..!!

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள ஒரு பல்கலைக்கழக மாணவி, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு வினோதமான கோரிக்கை ஒன்றை விடுத்ததற்காகக்…

14 minutes ago

“திமுகவா? அதிமுகவா?”… தமிழகத்தின் அடுத்த முதல்வர் யார்?… ஆட்சியை தீர்மானிக்கப் போகும் அந்த 43 இடங்கள்.. தந்தி டிவி கணிப்பில் வெளியான பகீர் முடிவுகள்…!

தமிழக சட்டசபை தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், தந்தி டிவி வெளியிட்டுள்ள கருத்துக்கணிப்பு முடிவுகள் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை…

15 minutes ago