தமிழக சட்டசபை தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், தந்தி டிவி வெளியிட்டுள்ள கருத்துக்கணிப்பு முடிவுகள் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. மொத்தமுள்ள 234 தொகுதிகளில் திமுக கூட்டணி 98 இடங்களிலும், அதிமுக கூட்டணி 91 இடங்களிலும் எளிதாக வெற்றி பெற வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எந்தவொரு கட்சிக்கும் ஆட்சி அமைக்கத் தேவையான 118 தொகுதிகள் என்ற மெஜாரிட்டி கிடைக்காதது, பிரதான கட்சிகளுக்கு அதிர்ச்சியைத் தந்துள்ளது.
நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் முதன்முறையாகத் தேர்தலில் களம் காண்பது, இந்த முறை கடும் தாக்கத்தை ஏற்படுத்தும் எனத் தெரிகிறது. பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு தொகுதிகளில் தவெக வெற்றி பெற வாய்ப்புள்ளதாகக் கணிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, தவெக பிரிக்கும் வாக்குகளால் பல தொகுதிகளில் வெற்றி வாய்ப்பு ஊசலாடுவதாகவும், இதுவே இழுபறி நிலைக்கு முக்கியக் காரணம் என்றும் இந்த ஆய்வு சுட்டிக்காட்டுகிறது.
அதேவேளையில், சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சி எந்தத் தொகுதியிலும் வெற்றி பெற வாய்ப்பில்லை என இந்த ஆய்வின் முடிவுகள் தெரிவிக்கின்றன. சீமான் போட்டியிடும் காரைக்குடி தொகுதியிலும் அவருக்குப் பின்னடைவு ஏற்படலாம் எனக் கூறப்பட்டுள்ளது. மார்ச் 29 முதல் ஏப்ரல் 20 வரை நடத்தப்பட்ட இந்த ஆய்வில், மூன்றாவது மற்றும் நான்காவது முனைப் போட்டிகள் பிரதான கட்சிகளின் வாக்கு வங்கியில் கணிசமான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளன.
தமிழகத்தின் அடுத்த முதலமைச்சர் யார் என்பதைத் தீர்மானிக்கும் சக்தியாக 43 தொகுதிகள் மாறியுள்ளன. இந்தத் தொகுதிகளில் நிலவும் கடும் போட்டி மற்றும் இழுபறி நிலையே ஆட்சியமைக்கும் கூட்டணியை நிர்ணயம் செய்யப் போகிறது. ஏப்ரல் 23-ல் நடைபெறும் வாக்குப்பதிவின் உண்மை நிலவரம், மே 4-ம் தேதி வாக்கு எண்ணிக்கையின் போது மட்டுமே முழுமையாகத் தெரியவரும் என்பதால், அரசியல் கட்சிகளும் மக்களும் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.
உத்தரப் பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில், 21 வயது வாலிபர் ஒருவர் தனது சொந்தத்…
ராஜஸ்தான் மாநில காவல்துறையினர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு, ஏழை மற்றும் மைனர் பெண்களைப் பொய் வாக்குறுதிகள் அளித்து ஏமாற்றி, அவர்களை…
ஆந்திரப் பிரதேசத்தின் பிரகாசம் மாவட்டத்தில், புது தில்லியிலிருந்து சென்னை நோக்கி வந்துகொண்டிருந்த கிராண்ட் டிரங்க் (ஜிடி) எக்ஸ்பிரஸ் இரயில் மீது…
நடந்து முடிந்த 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக சந்தித்த தோல்விக்கு உதயநிதி ஸ்டாலினின் தலைமையே முழு முதற்காரணம் என்று காங்கிரஸ்…
ஐஐஎம் பட்டதாரி ஒருவர், தனது முதல் பெருநிறுவன சம்பளத்தை பெற்ற கையோடு, அதனைத் ரொக்கமாக மாற்றித் தனது பெற்றோருக்குக் கொடுத்து…
மகாராஷ்டிர மாநிலம் புனேவில் உள்ள சின்ச்வாட் பகுதியில், பெண் ஒருவர் தான் வாங்கிய புதிய பெட்சீட்டில் 'மேட் இன் பாகிஸ்தான்'…