Categories: சினிமா

பிரபல நடிகரின் படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுக்கும் தேவா..? வித்தியாசமான காம்போவுக்கு காத்திருக்கும் தேனிசை தென்றலின் ரசிகர்கள்..

Spread the love

தேனிசைத் தென்றால் என்றால் அனைவருக்கும் நினைவுக்கு வருபவர் இசையமைப்பாளர் தேவா. 1980களின் மத்தியிலிருந்து 2012 வரை பரபரப்பாகவும் புகழ் உச்சியிலும் இருந்தவர். ஒரு சிறிய இடைவெளிக்குப் பிறகு தற்போது மீண்டும் புதிய படங்கள், லைவ்-இன் கான்சர்ட்கள் என பரபரப்பாகியுள்ளார். தமிழ் சினிமாவில் கானா பாடல்களுக்கு பெரும் முக்கியத்துவம் கொடுத்து துள்ளல் போட வைத்தவர் என்றால் அது தேவா தான்.

#image_title

அது எந்தளவுக்கு இருக்கும் என்றால், காதல் தோல்வி பாடல்களுக்கு கூட நம்மால் நடனமாடாமல் இருக்க முடியாது. அந்த அளவு கானா பாடல்களை அள்ளித் தந்தவர். கண்ணெதிரே தோன்றினாள், குஷி, வாலி, நினைத்தேன் வந்தாய், பொற்காலம், ஆசை, காதல் கோட்டை, தேவா, ஏழையின் சிரிப்பில், முகவரி, ப்ரியமுடன், சூரியன், நினைவிருக்கும் வரை படங்களின் பாடல்கள் எல்லாம் என்றைக்குமே அலுக்காது.

#image_title

நடிகர் விஜய்யின் ஆரம்ப காலத்தில், அவரது பல படங்களுக்கு இசையமைத்து வந்தார் தேவா. அதேப்போல அஜித்தின் வான்மதி, வாலி, ஆசை, காதல் கோட்டை போன்ற படங்களுக்கு தேவா தான் இசை. தேவாவிடம் இசையை வாங்கத் தெரிந்தால் “இது தேவா இசையா?!” என்று குழம்பும் அளவுக்கு இசையமைத்துக் கலக்குவாராம். பழைய நினைவுகளுக்குச் செல்ல வேண்டும் என்றால், தேவா பாடல்களைக் கேட்டாலே போதும் பள்ளி, கல்லூரி நண்பர்களுடன் அடித்த லூட்டிகள் கண்முன்னே வந்து செல்லும். இப்படி இசையில் பட்டையை கிளப்பி வந்தவர் சில காலம் ஓய்வெடுத்து வந்தார்.

#image_title

நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் திரைத்துறை பக்கம் வந்திருக்கும் தேவா, கர்ணன் படத்தில் மஞ்சனத்தி, மாமன்னன் படத்தில் நெஞ்சமே, நெஞ்சமே போன்ற பாடல்களை பாடி, இக்காலத்து ரசிகர்களையும் தன்வசப்படுத்தியுள்ளார். சமீபத்தில் தனுஷின் கேப்டன் மில்லர் படத்தில் ஜி.வி.பிரகாஷ் இசையில் ஒரு பாடலையும் பாடியிருக்கிறார் இசை. திரைக்கு மீண்டும் வந்தாச்சு.. மறுபடியும் இசையமைப்பாளர் அவதாரம் எடுத்தால் என்ன என்று எண்ணியவருக்கு, கௌதம் ராமச்சந்திரன் வாய்ப்பு கொடுத்திருக்கிறாம்.

கௌதம் ராமச்சந்திரன் சாய்பல்லவி நடிப்பில் வெளியான கார்கே படத்தின் இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர். இவர் அடுத்ததாக தயாரிக்கும் ஒரு படத்தில் தேவா இசையமைப்பாளராக கமிட் ஆகியுள்ளாராம். இப்படத்தை கௌதமின் நண்பர் ஷாம் இயக்கும் இப்படத்தில், யோகி பாபு ஹீரோவாக நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Archana

Recent Posts

“வேகமா போகாதீங்க…” காதில் வாங்காத டிரைவர்… பெங்களூருவில் அரங்கேறிய கொடூர சம்பவம்… ஆடியோ கிளிப் வெளியாகி சமூக வலைத்தளங்களில் கிளம்பிய கொந்தளிப்பு…!!

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் பைசாந்திராவில் இருந்து தொம்ளூர் பகுதிக்கு செல்வதற்காகச் சானி கிருஷ்ணா என்ற இளம்பெண் ரேபிடோ பைக் டாக்சியைப்…

21 seconds ago

“கரூர் to கோவை”…. செந்தில் பாலாஜி கையில்தான் சாய்ஸ்…. ஸ்டாலின் போட்ட அந்த ஒரு மாஸ் ‘கண்டிஷன்’… கடுப்பில் மா.செ.,க்கள்….!

திமுகவில் உட்கட்சி மறுசீரமைப்பு நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ள நிலையில், பல்வேறு முன்னாள் அமைச்சர்களின் மாவட்டச் செயலாளர் பதவிகள் பறிபோகும் அபாயம் ஏற்பட்டுள்ளதால்…

4 minutes ago

திக்.. திக்..! கூரையில் நின்ற ஸ்கார்பியோ…! மாடிக்கு கார் எப்படி போச்சு?… இணையத்தை அதிரவைக்கும் விசித்திர வீடியோ…!!

பீகாரைச் சேர்ந்த நபர் ஒருவர், தான் வெளிநாடு செல்வதற்கு முன்பாக தனது மஹிந்திரா ஸ்கார்பியோ காரை பாதுகாப்பாக வைக்கச் செய்த…

6 minutes ago

“அரசியல் பேசுனா நோ என்ட்ரி”…. கதவை பூட்டிய ராமதாஸ்.. கதறும் உடன்பிறப்புகள்…. தைலாபுரம் தோட்டத்தில் திடீரென வைக்கப்பட்ட அந்த போர்டு….!

பாமக நிறுவனர் மருத்துவர் எஸ்.ராமதாஸ், கடந்த 1980-ஆம் ஆண்டு முதல் தீவிர அரசியலில் ஈடுபட்டு வந்த நிலையில், தனது 88-வது…

7 minutes ago

புதுச்சேரியில் இறங்கும் கைலாசா அதிபர்?…. நித்யானந்தாவுக்கு Z+ செக்யூரிட்டி கோரும் சீடர்கள்…. சட்டசபையில் நடந்த திடீர் பரபரப்பு…..!

புதுச்சேரி அருகே ஏம்பலத்தில் அமைந்துள்ள தியான பீடத்தில் குடமுழுக்கு விழா நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளதை அடுத்து, இதில் பங்கேற்க 'கைலாசா' நித்யானந்தா…

11 minutes ago

அடச்சீ… ஏரி பக்கத்துல இது என்ன அத்துமீறல்?… பெண்களை ரகசியமாக வீடியோ எடுத்த இளைஞர்… சிக்கிய ஷாக்கிங் சம்பவம்…!

பெங்களூருவின் அகாரா ஏரிப் பகுதியில் நடந்து மற்றும் ஓடிக்கொண்டிருந்த பெண்களின் அனுமதியின்றி அவர்களின் விடியோக்களை ரகசியமாகப் பதிவு செய்ததாக ஒரு…

11 minutes ago