இன்றைய காலகட்டத்தில் மக்கள் பணத்தை சேமித்து வைக்க ஆரம்பித்து விட்டார்கள். முதலீடாகவோ பேங்கில் பிக்சட் டெபாசிட் ஆகவோ அல்லது சிப் பங்குச்சந்தை போன்ற பல இடங்களில் முதலீடு செய்ய ஆரம்பித்து விட்டார்கள். இதுபோல் தபால் நிலையங்களும் பலவித சேமிப்பு திட்டங்களை மக்களுக்கு வழங்கி வருகிறது. இது போன்ற தபால் நிலையங்களில் நம் பணத்தை சேமிக்கும் போது நமக்கு அதிகப்படியான வட்டியும் பணத்திற்கு எந்த வித பயமும் இன்றி உத்திரவாதமும் இருக்கும்.
அப்படி நீங்கள் மாத வருமானத்தை எதிர்பார்த்தால் உங்களுக்கு பென்ஷன் போன்ற மாத வருமானம் வரவேண்டும் என்று நினைத்தால் போஸ்ட் ஆபீஸில் சர்க்காரி யோஜனா திட்டத்தில் நீங்கள் உங்கள் பணத்தை முதலீடு செய்யலாம். அதன் விவரங்களை பற்றி இனிக் காண்போம்.
இந்த சர்க்காரி யோஜனா போஸ்ட் ஆபீஸ் ஸ்கீமில் உங்களது பணத்தை நீங்கள் முதலீடு செய்யும்போது உங்களுக்கு நிரந்தரமான மாத வருமானம் கிடைக்கும். இந்த திட்டத்தில் உங்களுக்கு 7. 4 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது. இந்தத் திட்டத்தில் குறிப்பிட்ட ஒரு தொகையை நீங்கள் முதலீடு செய்ய வேண்டும். ஒரு நபர் அக்கவுண்டுக்கு 9 லட்சம் ரூபாயும் ஜாயிண்ட் அக்கவுண்ட் மூலமாக 15 லட்சம் ரூபாய் வரையும் முதலீடு செய்யலாம்.
18 வயதுக்கு மேற்பட்ட யாவரும் இந்த திட்டத்தில் இணையலாம். இந்த திட்டத்தில் ஜாயிண்ட் அக்கவுண்டாக 15 லட்ச ரூபாய் முதலீடு செய்யும்போது வருடாந்திர வட்டியாக ரூ 1,11,000 உங்களுக்கு கிடைக்கும். இதன் மூலம் மாத வருமானம் ரூபாய் 9250 உங்களுக்கு கிடைக்கும். இதே தனிநபர் அக்கவுண்டில் 9 லட்சம் ரூபாய் நீங்கள் முதலீடு செய்தால் வருட வட்டி உங்களுக்கு ரூபாய் 66 600 கிடைக்கும். மாத வருமானமாக ரூபாய் 5500 கிடைக்கும்.
இந்த திட்டத்தில் உங்களுக்கு சேரும்போது பேங்க் FD யை விடவும் உங்களுக்கு அதிகப்படியான தொகை திரும்ப கிடைக்கும். ஒவ்வொரு ஐந்து வருடமும் புது வகையான வட்டி உங்களுக்கு கிடைக்கும். 5 வருடத்திற்கு மேலாக இந்த டெபாசிட் நீங்கள் வேண்டாம் என்று நினைத்தால் கூட திரும்ப பெற்றுக் கொள்ளலாம். யாரேனும் மொத்தமாக பென்ஷன் ரூபாய் போலவோ இல்ல வயதான பின்னால் நிரந்தர வருமானம் பெற நினைப்பவர்கள் இந்த திட்டத்தில் சேர்ந்து பயன்பெறலாம்.