வெயில்காலமே கிடையாது, மழை உடனே வரும்… நடிகை தேவயானி பண்ணை வீட்டோட ஸ்பெஷல் என்னனு பாருங்க..!

By Soundarya on டிசம்பர் 26, 2024

Spread the love

நடிகை தேவயானி முதன்முதலாக நடித்த திரைப்படம் கின்னரிப்புழையோரம் என்ற மலையாள படம் தான். அதனை தொடர்ந்து தமிழில் தொட்டாசிணுங்கி என்னும் திரைப்படத்தில் அறிமுகமாகி அடுத்தடுத்து பல வெற்றி படங்களில் நடித்துக் கொண்டிருந்தார். அதே நேரத்தில் இயக்குனர் ராஜகுமாரனுடன் காதல் ஏற்பட்டு பின்னர் வீட்டை எதிர்த்து எளிமையான முறையில் கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டார்கள். இந்த நிலையில் இதுவரைக்கும் ராஜ்குமார் தேவயானி குடும்பத்தார் ஏற்றுக்கொள்ளவில்லை என்ற தகவலும் வெளியாகியிருக்கிறது.

#image_title

ஆனாலும் நடிகை தேவயானி ராஜகுமாரனை காதலித்து திருமணம் செய்து சந்தோஷமாகத்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார். இந்த நிலையில் கடந்த 2015 ஆம் வருடம் ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள கிராமத்தில் சுமார் 5.30 ஏக்கர் நிலம் விவசாய நிலம் வாங்கி விவசாயம் செய்து வரும் தேவயானி மற்றும் ராஜகுமார் அங்கேயே ஒரு பண்ணை வீட்டையும் கட்டியிருக்கிறார்களாம். தேவயானி வீடு இருக்கும் எண்ணமங்கலம் என்ற கிராமத்தில் இருந்து சற்று தொலைவில் தான் சந்தியம்பாளையம். இதுதான் ராஜகுமாரனின் சொந்த ஊர்.

   
   

 

அந்த ஊரில் ராஜகுமாரனுக்கு பூர்வீக சொத்துக்கள் வீடு எதுவும் இல்லாததால் இங்கே இடம் வாங்கி வீடு கட்டி இருக்கிறார்கள். பசுமை இல்லம் கட்டி உள்ளார்கள். வீடு வெள்ளிச்சாமா இருக்குறதுக்காக வீட்டுக்குள்ளே வெளிச்சத்தை வச்சி கட்டியிருக்காங்க. வெயில் காலம் தெரியாம இருக்க ஒரு ஸ்விட்ச் போட்டா உடனே மழை பொழியும் அந்த மாதிரி வச்சி கட்டிருக்காங்க. அதுமட்டுமின்றி 2 மகள்களுக்கும் ஏற்ற மாதிரி வீட்டை இரண்டாக பிரித்து கட்டியுள்ளார்கள். நிலத்தில் வேலை பார்க்க ஆட்கள் இருந்தாலும் அடிக்கடி ராஜகுமாரனும் தேவயானியும் அவர்களோடு சேர்ந்து விவசாய வேலையும் சேர்ந்து செய்து வருகிறார்கள். தேவயானி சென்னையில் குடும்பத்தோடு வசித்து வந்தாலும் சூட்டிங் இல்லாத  நேரங்களில்  பண்ணை வீட்டிற்கு சென்று விடுவது தான் வழக்கமாம்.

இந்த இடத்தில் போர் போட்டு கிணறு வெட்டி பூச்செடிகளையும் வைத்து வளர்த்து வருகிறார்கள். தேவயானி  சென்னையில் குடும்பத்தோடு வசித்து வந்தாலும் சூட்டிங் இல்லாத நாட்களில் தன்னுடைய பண்ணை வீட்டுக்கு சென்று விடுவது தான் வழக்கமாகும். பொருட்களுக்கு எந்த ஒரு ரசாயன பொருட்களும் பயன்படுத்துவது கிடையாது. இயற்கை உரங்கள் தான் பயன்படுத்தி வருகிறார்கள். நடிப்பில் மட்டுமே இருந்து வரும் நடிகைகளுக்கு மத்தியில் தேவயானி இப்படி இருப்பதால் பலரும் பாராட்டி வருகிறார்கள்.